கர்த்தரின் பதில் எப்படி இருந்திருக்கும்? 

தனது சுவிசேஷ புஸ்தகத்தில் எல்லா காரியங்களையும் விளக்கிச் சொன்ன மத்தேயு, கெனேசரேத்து நாட்டு மக்களுக்கு இயேசு கிறிஸ்து சொன்ன பதிலை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே ஏன்? - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36


கெனேசரேத்து நாட்டு மக்கள், இயேசு கிறிஸ்துவிடம் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள், அதன் பின்பு தொட்டு சுகமும் அடைந்தார்கள், அப்படியானால் அவர்களுக்கு கர்த்தர் சொன்ன பதில்(உத்தரவு) எப்படி பட்டதாக இருந்திருக்கும்? 


சரி, தொடுங்கள் - என்று சொல்லி இருப்பாரோ?
தொடுங்கள், இனி மேல் இந்த மாதிரி கேட்க கூடாது - என்று சொல்லி இருப்பாரோ?
ஒரு பிள்ளைகள் தன் தகப்பனிடம் இப்படி கேட்கலாமா - என்று சொல்லி இருப்பாரோ?
இதற்காகத் தானே இந்த பூமிக்கு வந்தேன் - என்று சொல்லி இருப்பாரோ?

உண்மை என்னவென்றால் இயேசு கிறிஸ்து சொன்ன பதில் தெய்வீக அன்பு நிறைந்த ஆருதலின் வார்த்தையாகும், அதற்கு ஈடான வார்த்தைகள் இல்லாததினால் தான் மத்தேயுவினால் அதை குறித்து எழுத முடியவில்லை.