தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது
தான் நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்ட ஐசுவரியவானிடம், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று கர்த்தர் சொன்ன பொழுது, தான் அன்பு கூற வேண்டிய அந்த பிறன் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே என்பதை அறியாமல், இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி, நியாயப்பிரமாணத்தின் உள்நோக்கத்தை அறியாமல் அந்த ஐசுவரியவான் துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான் - 16.அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். 17.அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். 18.அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; 19.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். 20.அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். 21.அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 22.அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான் - மத்தேயு 19:16-22
இந்த "பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற கற்பனையை குறித்துச் சொல்லும் பொழுது, அது "தேவனிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற முதலாம் கற்பனைக்கு ஒப்பாயிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது, ஒப்பாயிருக்கிறது என்று சொல்லும் பொழுது, அந்த பிறனானவர் தேவனுக்கு சமனனாவராக இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும், அது நம் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே - 28.வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். 29.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30.உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். 32.அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33.முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். 34.அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை - மாற்கு 12:28-34
அப்படியென்றால் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளை, முதலாம் கற்பனையின் சொந்தக்காரராகிய பிதாவை நமக்கு தகப்பன் என்றும், இரண்டாம் கற்பனையின் சொந்தக்காரராகிய இயேசு கிறிஸ்து தாய் என்றும் உறுதிப்படுத்துகிறது, இது நமது பாக்கியமே.
இப்படி "உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற இந்த அற்புதமான கட்டளையானது ஒரு தீர்க்கதரிசனமாகவே இருக்கிறது - 35.அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36.போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். 37.இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38.இது முதலாம் பிரதான கற்பனை. 39.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40.இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் - மத்தேயு 22:35-40
எப்படியெனில் "தேவனிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற பிரதான கற்பனையில் சொல்லப்பட்ட தேவன், "பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற கற்பனையில் சொல்லப்பட்ட பிறனாக, அந்நியனாக, இயேசு கிறிஸ்துவாக இந்த பூமிக்கு வரப்போகிறார் என்கிற பரம ரகசியத்தை உள்ளடக்கியிருக்கிறது - உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் - லேவியராகமம் 19:34
மேலும் மனுக்குலத்தில் ஒருவராலும் நிறைவேற்றக் கூடாத நியாயப்பிரமாணம் ஏன் நமக்கு வழங்கப்பட வேண்டும்? அது அதனை நிறைவேற்ற தெய்வமே இந்த பூமிக்கு வரப்போகிறார் என்கிற ரகசியத்தை அறிவிக்கத்தான் - இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் - மத்தேயு 22:40