சந்தோஷத்தோடே திரும்பிவந்து
கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பல தலைப்புகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தின் படி, சீஷர்கள் இன்னும் பக்குவப்படாதவர்களாகத் தான் இருந்தார்கள்.
📌 அப்போஸ்தலர் என்கிற பெருமையுள்ளவர்களாக
📌 தங்களை தாங்களே மகிமைபடுத்துகிறவர்களாக
📌 மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களாக
📌 தங்களுக்குளேயே சண்டையிடுகிறவர்களாக
📌 மற்றவர்களின் ஊழியங்களை தடுப்பவர்களாக
📌 சிறியோர் பெரியோர் என்று தராதரம் பார்க்கிறவர்களாக
📌 மாமிசத்திற்கு இடம் கொடுப்பவர்களாக
இப்படி இருந்த சீஷர்கள் ஊழியத்தை முடித்து திரும்பி வந்த பொழுது, அவர்களிடம் கர்த்தர் கொடுக்கும் பரலோக சந்தோஷம் இல்லாமல் தான் இருந்தன - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10
ஆனால் கர்த்தர் அவர்களுக்கு நல்ல போதகராக இருந்து வழிநடத்தி தம்முடைய ராஜ்யத்திற்கு ஏற்ற பிள்ளைகளாக மாற்றின பொழுது, அவர்களிடம் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் தெரிந்தது, அது என்ன வென்றால், சீஷர்களிடம் தேவன் தந்த சந்தோஷம் நிரம்பி இருந்தது - பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள் - லூக்கா 10:17