பவுலின் கடிதங்களின் முக்கியத்துவம்
காலம் காலமாய் இஸ்ரவேல் மக்கள் பின்பற்றி வந்த நியாயப்பிரமாணத்தை, நன்மைக்கேதுவல்லாத கட்டளைகள் மற்றும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்கள் என்றே எசேக்கியேல் கூறியுள்ளார் - 23.ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும், 24.நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன். 25.ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன் - எசேக்கியேல் 20:23-25
இப்படி ஜீவனுக்கேதுவல்லாத நியாயப்பிரமாணத்தினால் பிரயோஜனம் ஒன்றும் இல்லாததினால் தான் ஏசாயா தீர்க்கதரிசி முதல் அநேகர் இயேசு கிறிஸ்துவின் வேதத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள் - என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன் - ஏசாயா 51:4
இயேசு கிறிஸ்துவின் உபதேசம், இந்த ஜீவனுக்கேதுவல்லாத நியாயப்பிரமாணத்திற்கு மாறானதாக இருந்ததினால் தான், கர்த்தர் தன் முதல் பிரசங்கமாகிய மலை பிரசங்கதிலுருந்து, சீஷர்களுக்கு உபதேசித்த கடைசி பிரசங்கம் வரை "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று உபதேசித்ததைப் பார்க்கலாம் - 21.கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான் - மத்தேயு 5:21-22 & அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார் - யோவான் 16:23
இந்த நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் கொண்ட நியாயப்பிரமாணத்தை குறித்து புதிய ஏற்பாட்டில் சொன்னது இந்த பவுல் தான் - 38.ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், 39.மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது - அப்போஸ்தலர் 13:38-39
அது மாத்திரம் இல்லாமல், நியாயப்பிரமாணத்தின் உச்சமாக கருதப்பட்ட விருத்தசேதனத்தை உதறி தள்ள தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாகவும் இவர் இருக்கிறார் - 1.ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். 2.இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 3.மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். 4.நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். 5.நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம் - கலாத்தியர் 5:1-5
மேலும், இயேசு கிறிஸ்துவினால் நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம் என்கிற சுவிஷேகத்தின் நிறைவையும், கர்த்தர் பவுலின் மூலமாக செய்து முடித்தார் - 1.நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? 2.அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். 3.ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. 4.அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். 5.நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. 6.இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம் - ரோமர் 7:1-6
இப்படி இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷேகத்தை எழுதி முழுமைப்படுத்தியவர் தான் அப்போஸ்தலனாகிய பவுல், அதனால் தான் ஒருவன் தன்னுடைய கிறிஸ்தவ ஜீவியத்தை தொடர்ந்து ஓட பவுலின் கடிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.