விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே
கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன? அது வரங்களை பெற்ற சீஷர்கள் ஒரு ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போனதினால் மாத்திரமா? இல்லை இதன் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வேறு காரியங்களும் இருக்கிறதா? - 14அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: 15.ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். 16.அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 17.இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 18.இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். 19.அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20.அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21.இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மத்தேயு 17:14-21
இது ஒரு முக்கியமான சம்பவமாய் இருப்பதினால், மார்க் புஸ்தகத்திலும் சொல்லப்பட்டுள்ளது - 17.அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18.அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19.அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20.அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21.அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22.இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23.இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24.உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், 25.அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26.அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். 27இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான் - மாற்கு 9:17-27
இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு செய்த உபதேசங்களை மத்தேயுவும், மார்க்கும் ஒரே தொகுப்பாக மத்தேயு 10ஆம் அதிகாரத்திலும், மார்க் 3ஆம் அதிகாரத்திலும் எழுதியுள்ளனர், ஆனால் லூக்காவோ இதை இரண்டு உபதேசங்களாக பிரித்து லூக்கா 9 மற்றும் 10ஆம் அதிகாரத்தில் எழுதியுள்ளார், மேலும் இந்த உபதேசத்தை வரங்களை பெற்ற சீஷர்கள் ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போன சம்பவத்தை மையமாக வைத்து இரண்டாக பிரித்து எழுதி உள்ளார் - 37.மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். 38.அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். 39.ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான். அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. 40.அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 41.இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். 42.அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார் - லூக்கா 9:37-42
இப்படி இந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதியப்பட்ட இரண்டு உபதேசங்களை ஒப்பிட்டு, இதிலிருந்து கர்த்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கும் காரியங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
லூக்காவின் பிரசங்கம்
மேலும், வரங்களை பெற்ற சீஷர்கள் ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போன பொழுது, கர்த்தர் சீஷர்களை ஜெபிக்கவும் உபவாசிக்கவும் சொன்னதை மத்தேயு மற்றும் மார்க் சுவிசேஷ புஸ்தகத்தில் பார்க்கலாம் - 19.அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20.அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21.இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மத்தேயு 17:19-21 & 28.வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29.அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மாற்கு 9:28-29
ஆனால் லூக்கா இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, காரணம் லூக்கா தன்னுடைய சுவிசேஷ புத்தகத்தில் இதை சொல்வதற்கு பதிலாக, எந்தெந்த காரியத்திற்காக கர்த்தர் உபவாசிக்க சொன்னார் என்று எழுதியுள்ளார், இதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம், மத்தேயு இந்த வாகனத்திருக்கு Full Service(ஜெபமும் உபவாசமும்) தேவை என்று குறிப்பிட்டுள்ளார், ஆனால் லூக்காவோ இந்த வாகனத்தில் என்னென்ன காரியங்கள் பழுது பார்க்க வேண்டும்(Oil change, fixing the break, filter change, filling the air etc.) என்று ஒவ்வொன்றாக எழுதியுள்ளார்.