முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்
யூத சமயத்தை சார்ந்தவனும், அதில் பரிசேய பிரிவை சேர்ந்தவனும், கமாலியேல் என்ற வேத பண்டிதரிடம் கற்று, பழைய ஏற்பாட்டின் வேதப்பிரமாணத்தை பின்பற்றுகிறவனுமாகிய சவுலை சந்தித்த தேவன் சொன்னது தான் "முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்பது - 1.சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; 2.இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். 3.அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; 4.அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். 5.அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 6.அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 7.அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் - அப்போஸ்தலர் 9:1-7
இந்த வார்த்தையின் அர்த்தத்தை அறியாமல் பல ஆங்கில மொழிப் பெயர்ப்புகளில் "முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்கிற வாக்கியத்தையே நீக்கிவிட்டார்கள், உதாரணத்திற்கு "முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்கிற வாக்கியம் NKJV மொழி பெயர்ப்பில் உள்ளது, ஆனால் ESV மொழி பெயர்ப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டது - And he said, Who are You, Lord? Then the Lord said, I am Jesus, whom you are persecuting. It is hard for you to kick against the goads - Acts 9:5(NKJV) & And he said, Who are you, Lord? And he said, I am Jesus, whom you are persecuting - Acts 9:5(ESV)
மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து "முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் முள் போன்ற காரியம் இருக்க தான் செய்கிறது, இதை யாரும் மறுக்க முடியாது, இது ஆதாமின் பாவத்தினால் உண்டானது, இப்படி மனுக்குலத்தில் காணப்படுகிற முட்கள் மரணத்தின் அடையாளமாகவும் இருக்கிறது - 17.பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18.அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 19.நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார் - ஆதியாகமம் 3:17-19
இந்த முள்ளை எடுத்து போடவோ, அதனை ஒடித்து போடவோ நம்மால் முடியாது, இந்த முள் பவுலின் வாழ்வினிலும் இருந்ததை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 7.அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. 8.அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். 9.அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் - II கொரிந்தியர் 12:7-9
நியாயப்பிரமாணத்தை கற்று தேர்ந்த சவுலுக்கு, தன் மாம்சத்திலே உள்ள முள்ளை தன் சுய பலத்தால் உதைத்து மேற்கொள்ள முடியும் என்பது தான் நம்பிக்கையும் உபதேசமமுமாய் இருந்தது, அதனால் தான் சவுலை பேர் சொல்லி அழைத்த தேவன் "முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்" என்று சொல்லி, நம்மிலுள்ள முள்ளை, அதாவது பாவ சுபாவத்தை நம்மால் உதைத்து போடமுடியாது, நம் தேவனுடைய கிருபையினால் தான் இவைகளை மேற்க்கொள்ள முடியும் என்று கற்றுக் கொடுத்தார் - 7.அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 8.நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 9.நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 10.நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது - I யோவான் 1:7-10
இப்படி தேவ கிருபையை பெற்ற பவுல் நியாயப்பிரமாணத்தை குறித்து சொன்னது தான் இந்த விலையேறப்பெற்ற விளக்கம் - 20.இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. 21.இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. 22.அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. 23.எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24.இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25.தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், 26.கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். 27.இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. 28.ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். 29.தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். 30.விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. 31.அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே - ரோமர் 3:20-31