சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்
இது யாரை குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள்? வேதாகமத்தில் யார் தன்னுடைய கைகளை விரித்து? - சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள் - புலம்பல் 1:17
பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் "ஓங்கிய கையினாலும்" அல்லது "ஓங்கிய புயத்தினாலும்" நம்மை இரட்சித்தார் என்று பார்க்க முடிகிறது, ஆனால் சரியான மொழி பெயர்ப்பின் படி "விரித்த கைகளினாலும்" அல்லது "விரித்த புயத்தினாலும்"(outstretched arm) என்று தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் - 6.ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, 7.உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள் - யாத்திராகமம் 6:6-7
Say therefore to the people of Israel, ‘I am the Lord, and I will bring you out from under the burdens of the Egyptians, and I will deliver you from slavery to them, and I will redeem you with an outstretched arm and with great acts of judgment -Exodus 6:6
இது நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பொழுது தான் நடந்தது, அவருடைய கைகள் ஆணிகளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை தான் "ஓங்கிய கையினாலும்", "ஓங்கிய புயத்தினாலும்" இரட்சித்தார் என்று வேதாகமத்தில் பல இடங்களில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ளது - 32.குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33.கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள் - லூக்கா 23:32-33