யோனாவின் குமாரனாகிய சீமோனே

கர்த்தருடைய தூதன் யோசேப்பை, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்று அழைத்த பொழுது, நம் எல்லோருக்கும் தெரியும் கர்த்தருடைய தூதனானவர் யோசேப்பின் காலத்திற்கு எறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவனுடைய மூதாதையராகிய தாவீது ராஜாவை குறிப்பிட்டு பேசுகிறார் என்று  - 18.இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20.அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21.அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் - மத்தேயு 1:18-21

எருசலேமில் வாழ்ந்த தாவீது ராஜாவைப் போல, காத்தேப்பேர் என்ற ஊரில் வாழ்ந்தவர் தான் யோனா என்ற தீர்க்கதரிசி, அந்த காத்தேப்பேர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரேத்துக்கு மிக அருகிலும், நசரேத்திலுருந்து  கப்பர்நகூமுக்கு போகும் வழியிலும் இருக்கிறது - 23.யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு, 24.கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை. 25.காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். 26.இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார். 27.இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார் - II இராஜாக்கள் 14:23-27

மேலும் இந்த யோனா புறஜாதி மக்களுக்கு சுவிசேஷத்தை கொண்டு சென்ற தீர்க்கதரிசியாகவும் இருந்தார் - 1.இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: 2.நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். 3.யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது. 4.யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான் -  யோனா 3:1-4

இப்பொழுது நாம் அறிந்து கொள்ளலாம், இயேசு கிறிஸ்து பேதுருவை ஏன்  "யோனாவின் மகனாகிய சீமோனே" என்று அழைத்தார் என்று, "தாவீதின் குமாரனாகிய யோசேப்பே" என்று சொல்லும் பொழுது தாவீதை நினைவு கூறும் நாம், "யோனாவின் மகனாகிய சீமோனே" என்று சொல்லும் பொழுது யார் அந்த யோனா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் -  40.யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41.அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42.பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 43.மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார் - யோவான் 1:40-43

இயேசு கிறிஸ்துவின் நாட்களில் இஸ்ரவேல் தேசத்தில் லட்சக் கணக்கான வாலிபர்கள் இருந்த பொழுதும், யோனாவின் குமாரனாகிய பேதுருவை தேடிவந்ததுக்கு ஒரு நோக்கம் உண்டு, அது யோனாவின் மேல் தேவனுக்கு இருந்த அன்பு தான் - 13.பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் - மத்தேயு 16:13-17

இப்படி கர்த்தர் யோனாவின் சந்ததியை 500 ஆண்டுகள் கழித்தும் பயன்படுத்துவார் என்றால், நாம் ஏன் நம் பிள்ளைகளை குறித்து கவலை கொள்ள வேண்டும்? கர்த்தருடைய பணியை மாத்திரம் தொடர்ந்து உற்சாகத்தோடு செய்வோம்.