இதோ, நீ சொஸ்தமானாய்

1.இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2.எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3.அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4.ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். 5.முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7.அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 8.இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9.உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 10.ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11.அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். 12.அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13.சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார் - யோவான் 5:1-13


முப்பத்தெட்டு வருஷம் வியாதியாயிருந்த மனுஷன், தன்னிடம் "சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா?" என்று கேட்டு தன்னை குணப்படுத்தினது இயேசு கிறிஸ்து என்பதை அறியாமல் இருந்தான், அவனுடைய நிலைமை,  காலங்காலமாய் தேவதூதன் தண்ணீரை கலக்கும் பொழுது அதில் இறங்கி சுகம் அடைந்தோரின் நிலைமையைப் போல் தான் இருந்தது, தன்னை குணப்படுத்தினது யார் என்பதை அறியாமல் இருந்தான், அவன் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டுமே, அதுவல்லவா நித்தியஜீவன் - ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் - யோவான் 17:3


அதனால் தான் இயேசு கிறிஸ்து அவனுக்கு மறுபடியும் தரிசனமானார், அவன் இயேசு கிறிஸ்து தான் தன்னை குணமாக்கினது, அவர் தான் மெய்யான தெய்வம் என்று அறிந்துக் கொண்ட பொழுது, கர்த்தர் சொன்னது தான் "நீ சொஸ்தமானாய்" என்பதாகும் - 14.அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 15.அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான் - யோவான் 17:14-15


இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தது, நாம் இந்த உலக ஆசீர்வாதங்களை பெறுவதற்காக மாத்திரம் அல்ல, மாறாக அவருடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அதனால் தான் முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த மனுஷனிடம் "சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா?" என்று கேட்ட  இயேசு கிறிஸ்து, அவன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து பொழுது "இதோ, நீ சொஸ்தமானாய்" என்று சொல்லவில்லை, அவனை யூதர்கள் விசாரித்த பொழுது "இதோ, நீ சொஸ்தமானாய்" என்று சொல்லவில்லை, மாறாக அவன் இயேசு கிறிஸ்து தான் தன்னை குணமாக்கினது என்று அறிந்துக் கொண்ட பொழுது "இதோ, நீ சொஸ்தமானாய்" என்று சொன்னார்.



மேலும் நாம் எப்பொழுதும், அதாவது இந்த பூமியில் வசிக்கும் பொழுதும் அவரோடு இருக்க வேண்டும், அவருக்கு நல்ல சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், "அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" என்று கட்டளையிட்டர்.