நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை அறியேன்
ஆளுகிறவர்களும், ராஜ்யங்களும் கிறிஸ்தவத்திற்கு ஏதிராக பலவிதமான காரியங்களை செய்தாலும், இரட்சிக்கப் படப்போகிற திரள் கூட்ட மக்களை யாராலும் தடை செய்ய முடியாது, காரணம் பரலோக ராஜ்யத்தில் இரட்சிக்கப் பட்டவர்களின் தொகை எண்ணக்கூடாததாய் இருக்கும் என வேதாகமம் சொல்லுகிறது, இதை செய்து முடிக்க இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின பரிசுத்த இரத்தம் போதுமானதாய் இருக்கிறது, இதை நாம் பரலோகம் சென்ற பிறகு தான் முழுவதும் உணரமுடியும் - 9.இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். 10.அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள் - வெளி 7:9-10
இப்படி திரள் கூட்டமான மக்களை இயேசு கிறிஸ்துவிடம் சேர்ப்பத்திற்காக தான் நாம் அழைக்கப்பட்டு இருக்கும் பொழுது, ஒருவன் கர்த்தரிடம் "இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ" என்று கேட்ட கேள்வி எவ்வளவு அபத்தமானது? அது எவ்வளவாய் தேவ சித்தத்திற்கு விரோதமான கேள்வி? - அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான் - லூக்கா 13:23a
அப்படி கேட்டவன், அவனும் அவன் பார்வைக்கு நல்லவர்களாய் படுகிற சிலரும் தான் பரலோகத்தை சுதந்தரிப்பார்கள் என்று நினைத்தான், ஆனால் இயேசு கிறிஸ்துவோ நம்முடைய நீதியினிமித்தம் இல்லாமல், தன்னுடைய இரத்தத்தினால் நம்மை தன்னுடைய பரலோக ராஜ்யத்திற்கு கொண்டு போகிறவராய் இருக்கிறார், காரணம் அவர் சிலுவையில் சிந்தின பரிசுத்த இரத்ததின் வல்லமைக்கு அளவே கிடையாது, அதனால் தான் அந்த சுயநீதியும் குறுகிய எண்ணமுள்ளவனை பார்த்து "நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன்" என்று இரண்டு முறையும், நீங்கள் பரலோகத்துக்கு வெளியே தான் நிற்பீர்கள் என்றும் கர்த்தர் சொன்னார் - 23b.அதற்கு அவர்: 24.இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 25.வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். 26.அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். 27.ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28.நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 29.கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். 30.அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார் - லூக்கா 13:23b-30
தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்?
அது மாத்திரம் இல்லாமல், தேவனுடைய ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு ஏத்த காரியம் இந்த பூமியில் இல்லை என்பதையும் தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம், அதனால் எப்பொழுதும் நாம் பரலோக ராஜ்யம் நிரப்பப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைக்கிறவர்களாகவும், மற்றவர்களுக்காக இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துப் பேசுகிறவர்களாகவும் இருப்போம் - 30.பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? 31.அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; 32.விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். 33.அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார் - மாற்கு 4:30-33