சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்
கர்த்தர் இந்த இரண்டு அற்புதங்களை செய்வதற்கு முன்பு சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை சொஸ்தமாக்கினார், ஆனால் சொஸ்தமாக்கினதை மிகைப்படுத்தாமல், அவர்களுக்கு ஒருவேளை போஜனம் கொடுத்ததை மிகைப்படுத்தி சொல்லியிருக்க காரணம் என்ன? அதாவது ஒரு குருடர் பார்வையடைந்ததை மிகைப்படுத்தாமல், பார்வையடைந்த பின்பு அவருக்கு போஜனம் கொடுத்ததை மிகைப்படுத்தி சொல்லக் காரணம் என்ன? - 30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள் - மத்தேயு 15:30-31
கர்த்தர் ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த அற்புதம்
கர்த்தர் ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த அற்புதத்திற்கு முன்பு, அந்த வந்திருந்த திரள் கூட்ட மக்களில் எல்லா வியாதியஸ்தர்களையும் சொஸ்தமாக்கினார் என்று பார்க்கிறோம். சுகமடையும் அற்புதம், நிச்சியமாகவே ஒரு வேளை போஜனத்தை காட்டிலும் மிகவும் விசேஷமானது, ஆனால் வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், எல்லோருக்கும் அப்பம் கொடுக்கப்பட்டதை மிகைப்படுத்திச் சொல்லக் காரணம் என்ன? - 13இயேசு அதைக் கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். 15சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 16இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். 17அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். 18அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 19அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். 20எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 21ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் - மத்தேயு 14:14-21
கர்த்தர் ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்த அற்புதம்
மறுபடியும் கர்த்தர் ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்த அற்புதத்திற்கு முன்பும், அநேக வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினார் என்று பார்க்கிறோம், சொஸ்தமானவர்கள் என்று சொல்லும் பொழுது அவர்கள் சாதாரண காய்ச்சல், தலைவலி போன்ற வியாதியுள்ளவர்கள் அல்ல, வாழ்க்கையில் சப்பாணிகளாய் இருந்து நடக்க ஆரம்பித்தவர்கள், குருடராய் இருந்து கண் பார்வை பெற்றவர்கள், ஊமையாய் இருந்து பேச ஆரம்பித்தவர்கள், உடல் உறுப்புகள் ஊனராய் இருந்து சுகம் பெற்றவர்கள், நிச்சியமாகவே இந்த அற்புதங்கள் ஒரு வேளை சாப்பாட்டை காட்டிலும் மிகவும் விசேஷமானது, ஆனால் வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், எல்லோருக்கும் அப்பம் கொடுக்கப்பட்டதை மிகைப்படுத்திச் சொல்லக் காரணம் என்ன? - 29இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார். 33அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். 34அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள். 39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார் - மத்தேயு 15:29-39
ஏன் என்றால், இயேசு கிறிஸ்து பிட்டு கொடுத்த அப்பம் நமக்காக அவர் சிலுவையில் பிட்கபட்டதையே குறிக்கிறது, இதை ஒரு ஊதாரணத்தோடு பார்த்தால் எளிதாய் புரிந்துக் கொள்ளலாம், மணி என்கிற பிறவி குருடனும், மாணிக்கம் என்கிற ஊமையனும் அந்த கூட்டத்திற்கு சென்றார்கள், இயேசு கிறிஸ்து மணிக்கு பார்வை கிடைக்க செய்தார், மாணிக்கமும் பேச ஆரம்பித்து விட்டார், ஆனாலும் அவர்கள் இருதயம் திருப்தியடையாமல் இருந்ததாம், ஆனால் இறுதியில் இயேசு கிறிஸ்து கொடுத்த அப்பத்தை சாப்பிட்ட பின்பு தான் அவர்கள் ஆத்மா திருப்தியடைந்ததாம்.
இறுதியில் மணியும் மாணிக்கமும் பார்வையடைந்தவராகவும், பேசுகிறவராகவும் தங்கள் கிராமத்திற்கு சென்ற பொழுது, ஊராருக்கு ஒரே ஆச்சரியம், எல்லாரும் இது எப்படி நடந்தது என்று கேட்ட பொழுது, பார்வையடைந்த மணியும், பேசுகிற மாணிக்கமும் இயேசு கிறிஸ்து கொடுத்த அப்பத்தை குறித்து பேச ஆரம்பித்தார்களாம், அதனால் தான் வேதாகமம் எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள் என்று சொல்லுகிறது.
நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்ற சிலுவையில் பிட்கபட்ட இயேசு கிறிஸ்துவை மேன்மை பாராட்டுகிறோமா, அல்லது இவ்வுலக ஆசீர்வாதங்களை குறித்து மேன்மை பாராட்டுகிறோமா? வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், அதாவது இந்த உலக ஆசீர்வாதங்களை மிகைப்படுத்திச் சொல்லாமல், சிலுவையில் பிட்கபட்ட ஜீவ அப்பத்தினாலுண்டாகும் ஆத்ம திருப்தியை மிகைப்படுத்திச் சொல்லுகிறது, ஏன் என்றால் இந்த உலக ஆசீர்வாதங்கள் காட்டிலும் சிலுவையின் அப்பம் விலையேரப்பெற்றது.