அப்போஸ்தலனாகிய பவுலை குறித்த தீர்க்கதரிசனம்

கர்த்தரால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலகளில் முதன்மையானவர் அப்போஸ்தலனாகிய பவுல் ஆகும், அது மாத்திரம் இல்லாமல், புதிய ஏற்பாட்டு புஸ்தகத்தில் பெருமபான்மையான புஸ்தகங்கள் அவரால் எழுதப்பட்டதாய் இருக்கிறது, ஏன் லூக்காவின் சுவிஷேசம் மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகங்கள் கூட பவுலின் சக ஊழியக்காரரான லூக்காவால் எழுதப்பட்டது தான், இப்படி தேவராஜ்ஜியம் கட்டப்பட கர்த்தரால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டவர் தான் அப்போஸ்தலனாகிய பவுல், அதனால் தான் பவுலை குறித்து கிறிஸ்தவத்தின் முதலாளி என்று புகார்கள் கொடுக்கப்பட்டன - 1.ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். 2.அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3.கனம்பொருந்திய பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். 4.உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். 5.என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம் - அப்போஸ்தலர் 24:1-5


இப்படி தேவனால் பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் கடிதங்கள் வேதாகமத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும், தேவ ஆலோசனையாகவும் இருக்கிறது,  ஆனால் சில கள்ளர்கள் பவுலின் புஸ்தகங்கள் வேதாகமத்திலிருந்து இருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு "Bible Contains Fake Letters from Paul", "Paul is a False Apostle", "The False Teachings of The Apostle Paul", etc. என்கிற தலைப்புகளில் தங்கள் கருத்துகளை பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள், அதே சமயத்தில் இன்னொரு கூட்டத்தார் தேவனால் அருளப்பட்ட இந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு மார்மன் (The Book of Mormon by Church of Jesus Christ of Latter-day Saints and Smith) போன்ற மனித  புரட்டுகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது?

பவுலின் ஊழியத்தின் மேலெழும்புகிற சந்தேகங்களும் கேள்விகளும் போலவே, இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் மேலும் கேள்விகள் எழும்பின, அப்பொழுது யோவான் பழைய ஏற்பாட்டில் தன்னை குறித்து சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனத்தை எடுத்துக்காட்டி எல்லாருடைய சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் - 19.எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20.அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21.அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். 22.அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23.அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான் - யோவான் 1:19-23


இப்படி தன்னை குறித்து எழுந்த சந்தேகங்களும் கேள்விகளும் முற்றுப்புள்ளி வைக்க யோவான் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம், அதாவது யோவான் பிறப்பதற்கு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பே அவரை குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் - 3.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4.பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும். 5.கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று - ஏசாயா 40:3-5 



இப்படி இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவானைக் குறித்து பழைய ஏற்பாட்டில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்குமானால், யோவானைக் காட்டிலும் அதிகமாய் பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலை குறித்த தீர்க்கதரிசனங்களும் வேதாகமத்தில் இருக்கத்தானே வேண்டும், இதனை அறிந்துக்கொண்டால் அப்போஸ்தலனாகிய பவுலின் புஸ்தகங்கள் தேவனால் அருளப்பட்டவைகளா என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு நாம் கலங்க வேண்டிய அவசியமே இல்லை.


அப்போஸ்தலனாகிய பவுலின் கோத்திரம்

சீஷர்கள் யாருமே தங்கள் கோத்திரத்தை குறித்து பேசாத பொழுது, கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் துச்சமாக நினைத்த அப்போஸ்தலனாகிய பவுல் தனது கோத்திரத்தை குறிப்பிட காரணம் என்ன? இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன் - ரோமர் 11:1

இதற்கு காரணம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை குறித்தும் சீஷர்களை குறித்தும் சங்கீதகாரன் சொன்ன தீர்க்கதரிசனத்தில், பென்யமீன் கோத்திரத்தை குறித்தும் சொல்லியிருந்தான்,  இதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அப்போஸ்தலனாகிய பவுல் தன் சுய பலத்தால் கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யவில்லை, அவர் தேவனால் முன்குறிக்கப்பட்டவர் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் தேவ ஆவியானவர் இந்த காரியங்களை வேதாகமத்தில் சொல்லியிருந்தார் - 26.இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். 27.அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு - சங்கீதம் 68:26-27



அது மாத்திரம் இல்லாமல், இந்த தீர்க்கதரிசனத்தில் சொன்னது போலவே, இயேசு கிறிஸ்துவின் ஊழியங்களும் செபுலோன் மற்றும் நப்தலி நாடுகளிலிருந்து பிரபுக்களை (சீஷர்களை) உருவாக்கும் விதத்திலேயே இருந்தது - 12.யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், 13.நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார் - மத்தேயு 4:12-13


இந்த பென்யமீனுக்கான தீர்க்கதரிசனங்கள் ஆதியாகமம் புஸ்தகத்திலிருந்தே கூறப்பட்டு வந்தன, எப்படியெனில் இந்த பென்யமீன் முதலாவது பெனொனி அதாவது துக்கத்தின் மகன் என்று பெயரிடப்பட்டிருந்தான், அதன் பின்பு பென்யமீன் என்று அர்த்தம் கொள்ளும் நீதியின் மகனாக மாற்றப்பட்டான்,  இதுவும் கூட ஒரு சபையை துக்கப்படுத்துகிறவனாக இருந்த சவுல், சபையை கட்டும் பவுலாக மாறப்போவதையே தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்துகிறது - 16.பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. 17.பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். 18.மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி [துக்கத்தின் மகன்] என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் [நீதியின் மகன்] என்று பேரிட்டான் - ஆதியாகமம் 35:16-19


அது மாத்திரம் இல்லாமல், இந்த பென்யமீனுக்கு(அப்போஸ்தலனாகிய பவுலுக்கு) தேவகிருபையும், வரங்களும் வாக்குத்தத்தம் பன்னப்பட்டதை தான் இந்த வசனங்கள் தீர்க்கதரிசனமாக சொல்லுகிறது  - 29.அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான். 30.யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான். 31.பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான். 32.எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள். 33.அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். 34.அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள் - ஆதியாகமம் 43:29-34

 

21.இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள். யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும், 22.அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான் - ஆதியாகமம் 45:21-22


பென்யமீன் கோத்திரத்தில் வந்த சவுல் ராஜாவின் அபிஷேகத்தில் இருக்கும் கேள்விகள்

அதற்கு பின்பு, பென்யமீன் கோத்திரத்தில் வந்த சவுல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டார், இயேசு கிறிஸ்து யூதா கோத்திரத்தில் தான் பிறக்கப்போகிறார் என்று ஆதியாகமம் புஸ்தகம் முதல் தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டிருக்க, பென்யமீன் கோத்திரத்தில் வந்த சவுல் அபிஷேகம் பண்ணப்பட காரணம் என்ன? - 9.யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? 10.சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள் - ஆதியாகமம் 49:9-10 

 


சவுலை அபிஷேகம் பண்ணும்போது, சாமுவேல் சில வாக்குத்தத்தங்களை கொடுத்தார் நன்றாய், ஆராய்ந்துப் பார்த்தால், அந்த வாக்குத்தத்தங்களை உறுதிப்படுத்தும் அடையாளங்கள் மாத்திரமே சவுல் ராஜாவினிடத்தில் நிறைவேறியிருந்தது - 1.அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? 2.நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். 3.நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, 4.உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். 5.பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 6.அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். 7.இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். 8.நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான். 9.அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது - I சாமுவேல் 10:1-6


ஆரோனின் அபிஷேகம்


பல நேரங்களில் சவுலை தாவீதோடு ஒப்பிடுவதுண்டு, நன்றாய் ஆராய்ந்துப்பார்த்தால் சவுல் பெற்ற அபிஷேகம் ஆரோனின் அபிஷேகத்துக்கு ஒத்ததாகவே இருக்கிறது - 12.அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான். 13.பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து, 14.பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்; 15.அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான் - லேவியராகமம் 8:12-15


காரணம், அபிஷேகத்தின் செய்யப்பட்ட பொது, பலியின் விஷேசமான பகுதியான முன்னந்தொடை ஆரோனுக்கும் அதன் பின்பு சவுலுக்கும் கொடுக்கப்பட்டது    - 32.உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. 33.ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும். 34.இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார் - லேவியராகமம் 7:32-34



இதில் ஆரோனுக்கு அளிக்கப்பட்ட அபிஷேகம், பலி செலுத்துவதற்க்கான அபிஷேகமாக இருந்தது, அதாவது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்பதற்கான அபிஷேகமாய் இருந்தது, இப்படி பலி செலுத்துவதற்க்காக அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் சந்ததியில் வந்த காய்பா என்ற பிரதான ஆசாரியர் தான் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு ஒப்புகொடுத்தார் - 23.அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. 24.அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, 25.கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான் - லூக்கா 23:23-25
 


ஆரோனைப்போல இன்னுமொருவர் அபிஷேகம் பண்ணப்படவேண்டும்  

 

லேவிகோத்திரத்திலிருந்து ஆரோனை அபிஷேகம் செய்த பின்பு, கர்த்தர் மறுபடியும் மற்ற கோத்திரத்திலிருந்தும் ஒருவரை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று மோசேயிடம் சொன்னது நிச்சியமாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது - 3.ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். 4.உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். 5.அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார் - உபாகமம் 18:3-5 



சவுல் ராஜாவை தெரிந்தெடுத்த கர்த்தர்

  
மோசேயிடம் ஆரோனைப்போல இன்னுமொருவர் அபிஷேகம் பண்ணப்படவேண்டும் என்று சொன்ன கர்த்தர், மோசேயின் காலத்திற்கு ஏறக்குறைய 300 ஆண்டுகள் கழித்து சாமுவேலிடம் அதனை குறித்து பேசினார்  - 15.சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க: 16.நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். 17.சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார் - I சாமுவேல் 9:15-17


கர்த்தர் சொன்னபடி சவுலை அபிஷேத்த சாமுவேல், முதலாவது பலியின் முன்னந்தொடையை சவுலுக்கு கொடுத்தார் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது - 23.பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். 24.அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டுவந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான் - I சாமுவேல் 9:23-24

 

பலியின் முன்னந்தொடை கொடுக்கப்பட்ட பின்பு, சாமுவேல் சவுலை அபிஷேகம் செய்தார் - அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? - I சாமுவேல் 10:1

ஆரோனின் அபிஷேக முறையில் பலியின் முன்னந்தொடை கடைசியாக கொடுக்கப்பட்டதின் காரணம், இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளுடன் அவர்களின் ஊழியம் நிறைவடைந்ததினால் தான், ஆனால் சவுலுக்கோ இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடு காத்திருக்க வேண்டும் என்றும் அதன் பின்பு தான் ஊழியம் என்பதினால் முதலாவது பலியின் முன்னந்தொடை கொடுக்கப்பட்டு பின்பு அபிஷேகம் செய்யப்பட்டார், அதனை உணர்த்த தான் சவுல் ராஜா பலிகள் செலுத்த அனுமதிக்கப்பட வில்லை.




சவுல் ராஜாவின் சந்ததியார்

அபிஷேகத்தின் சிறப்பு அம்சமே, அபிஷேகம் செய்யப்பட்டவருடைய சந்ததியார் மூலம் காரியம் நிறைவேறும் என்பது தான், அது தேவனால் மாத்திரமே கூடும், இந்த சவுலின் வம்சத்தில் வந்தவர்கள் தான், யோனத்தான், மேவிபோசேத், மொர்தெகாய், மற்றும் எஸ்தர் போன்றவர்கள், இவைகளுக்கு பின்பு மோசே மற்றும் சாமுவேலால் சொல்லப்பட்ட பலி ஏறெடுக்கப்பட்ட பின்பு, அதாவது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்குப் பின்பு சவுல் என்ற பெயருடன் ஒருவர் துக்கத்தின் மகனாக அதாவது சபையை துக்கப்படுத்துகிறவனாக(பெனொனியாக) உலாவந்தார் - 1.சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; 2.இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான் - அப்போஸ்தலர் 9:1-2


அவர் தான் பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த சவுல், இஸ்ரவேலில் ஒருவரின் பெயரைக் கொண்டும் அவரின் கோத்திரத்தை கொண்டும் அவரின் குடும்பத்தை அறிந்துக் கொள்ளமுடியும், அவரின் பெயரை கொண்டு இவர் சவுல் ராஜாவின் சந்ததியில் வந்தவர் என்பதை  ஓரளவுக்கு யூகிக்க முடியும், ஆனால் இவரின் வாழ்க்கையில் சவுல் ராஜாவிடம் சாமுவேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள் அப்படியே நிறைவேறினதினால் மிகவும் உறுதியாக சொல்ல முடியும், இவர் சவுல் ராஜா, யோனத்தான், மேவிபோசேத், மீகாவின் சந்ததியில் வந்தவர் என்று - 5.நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; 6.பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். 7.ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் - பிலிப்பியர் 3:5-7


சபையை துக்கப்படுத்துகிறவனாக இருந்த சவுலின் இரட்சிப்பு

சவுலிடம் சாமுவேல் மூன்று காரியங்களை சொல்லியிருந்தார் (I சாமுவேல் 10:2-6), இதை எளிதாக புரிந்துக் கொள்ள இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை நாம் அறிந்துக் கொள்வது அவசியம், அதனோடு எப்படி மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை கல்லறையில் தரிசித்தாள் என்பதை நினைவு கூற வேண்டும், மகதலேனா மரியாள் முதலாவது இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இரண்டு பேரை கண்டாள், அதன் பின்பு இயேசு கிறிஸ்துவை கண்டாள்.


1. நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள் - ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய் என்று எதை குறித்து பேசினார்? அது கல்லறையிலிருந்து எழுந்தஇயேசு கிறிஸ்துவை குறித்து தான் பேசினார். கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம் என்று ஏற்கனவே சாமுவேல் சவுலிடம் 9ஆம் அதிகாரத்தில் சொல்லிவிட்டார், பின்பு கழுதைகள் அகப்பட்டது என்று எதை குறித்து பேசினார்? அது கழுதையாயிருந்து இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட புறஜாதியரை குறித்து தான் பேசினார்.



2. நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, 4.உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும் - இந்த வாக்குத்தத்தில் உள்ள மூன்று மனுஷர் என்பது, இயேசு கிறிஸ்துவை மறைமுகமாக அவரின் திருத்துவதை கொண்டு சொல்லுகிறது, மேலும் இந்த வாக்குத்தமானது பவுலுக்காக தேவன் முன்குறித்த கிருபைகளையும் வரங்களையும் குறித்துச் சொல்லுகிறது.


3. பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 6.அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய் - இந்த வாக்குத்தமானது, இரட்சிக்கப்பட்ட சவுல் எப்படி பவுலாக மாறப்போகிறார் என்பதை குறித்த தீர்க்கதரிசனமாகவே இருக்கிறது      

 


இப்படி துக்கத்தின் மகனாக அதாவது சபையை துக்கப்படுத்துகிறவனாக(பெனொனியாக) இருந்த சவுல் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதியின் மகனாக அதாவது பென்யமீனனாக மாற்றப்பட்டதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 3.அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; 4.அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். 5.அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 6.அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 7.அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். 8.சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். 9.அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான். 10.தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். 11.அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். 12.அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். 13.அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். 14.இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். 15.அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். 16.அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். 17.அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். 18.உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான் - அப்போஸ்தலர் 9:3-18



இப்படி தேவனால் முன்குறிக்கப்பட்டிருந்ததினால் தான்,  இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், மரித்து உயிர்த்தெழுந்த லாசரு, உயிரோடு எழுப்பப்பட்ட நாயீன் ஊர் விதவையின் மகன், பார்வையடைந்த பர்திமேயு என்று பலர் இருந்த பொழுதும், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு கிறிஸ்தவத்தின்(நசரேயருடைய மதபேதத்துக்கு) முதலாளி என்று அழைக்கப்படும் படியான கிருபை கொடுக்கப்பட்டது - 8.எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். 9.நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. 10.ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது - I கொரிந்தியர் 15:8-10 


தேவனால் அருளப்பட்ட மகத்துவமான வேதபுஸ்தகம்

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் பொழுது, அவரை முன்னிறுத்தி புதிய ஏற்பாடு புஸ்தகம் எழுதப்பட வேண்டும் என்று கர்த்தர் மோசேயின் மூலமாக சொல்லியிருந்தார் - 18.அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், 19.இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, 20.அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள் - உபாகமம் 17:18-20 


இப்படி தேவனால் முன்குறிக்கப்பட்ட பரிசுத்த வேதபுஸ்தகத்தை எழுதி முடிக்க, தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாகவும் அப்போஸ்தலனாகிய பவுல் இருக்கிறார், இப்படிபட்ட ஆதாரங்கள் இருக்கும் பொழுது, கர்த்தருடைய வேதத்திற்கு மாறான காரியங்கள் சொல்லப்படும் பொழுது கலங்காமலும் சந்தேகப்படாமலும் இருப்போம்.