அதோ, உன் தாய்

இயேசு கிறிஸ்து சொன்ன "அதோ உன் தாய்" என்பதின் அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு, வேதாகமம் சொன்ன அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் என்பதின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை குறித்துச் சொல்லும் பொழுது, வேதாகமம் அவரை ஒரு விதையில் இருந்து முளைத்த செடி என்று சொல்லாமல், வேரிலிருந்து முளைத்த கிளை என்றே சொல்லுகிறது, ஏனென்றால் விதையில் இருந்து முளைத்த செடிக்கு வயது இருக்கும், ஆனால் வேரிலிருந்து முளைத்த கிளைக்கு வயது கிடையாது, அது அந்த மரமாகவே கருதப்படும், அதே போல் தான் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், பிதாவின் அடிமரத்திலிருந்து உண்டான துளிராகவும், அதின் வேர்களிலிருந்து எழும்பும் கிளையாகவும், நமக்கு தேவனாகவும் இருக்கிறார் - 1.ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். 2.ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார் - ஏசாயா 11:1-2



இந்த விளக்கத்தை தான் வேதாகமம் முழுவதும் பார்க்கிறோம், ஆதாம் மற்றும் ஏவாளின் படைப்புகளும் இதையே முன்னிறுத்துகிறது, எப்படியெனில் ஜீவாத்துமாவாக படைக்கப்பட்ட ஆதாம், நம் பிதாவாகிய தேவனுக்கு அடையாளமாக இருக்கிறார் - தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் - ஆதியாகமம் 2:7 



ஏவாள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடையாளமாக இருக்கிறார், அதனால் தான் ஏவாள் ஆதாமை போல் மண்ணிலிருந்து உண்டாக்கப்படாமல், பிதாவின் மடிக்கு ஒப்பான ஆதாமின் விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்டாள் - 21.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார் - ஆதியாகமம் 2:21-22



அதே சமயத்தில், நம் பிதாவாகிய தேவனும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தனித்தனி நபர்களாக இருந்தாலும், ஒரே தெய்வமாக இருக்கிறார்கள் என்பதை தான் இந்த வசனங்கள் விளக்குகிறது - 23.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 24.இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் - ஆதியாகமம் 2:23-24



இப்படி ஏவாள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடையாளமாக இருந்ததினால் தான், நாம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளினால் மாத்திரமே, அவரின் பிள்ளைகளாக முடியும் என்பதை தான் இந்த வசனங்கள் தீர்க்கதரிசனமாக சொல்லுகிறது,  இதில் ஸ்திரீ என்கிற வார்த்தை எபிரேய பாஷையில் ஈஷா(ʼishshâh) என்று அழைக்கப்படுகிறது, அது நம்மை சிலுவையின் பாடுகளினால் பெற்றெடுத்த இயேசு கிறிஸ்துவே -  13.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். 14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15.உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். 16.அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார் - ஆதியாகமம் 3:16



இப்படி  நம்மை சிலுவையின் பெற்றெடுத்த இயேசு கிறிஸ்துவே ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் - ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் - ஆதியாகமம் 3:20


அதோ, உன் தாய்


இப்படி இயேசு கிறிஸ்துவே நம்முடைய தாய் என்பதை அறிந்தவர்களாகவும், யோவானை போல் கர்த்தரின் மார்பில் சாய்ந்திளைப்பாறும் அனுபவம் இருந்தால் மாத்திரமே, இயேசு கிறிஸ்து சொன்ன "அதோ உன் தாய்" என்பதின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள முடியும் - 21.இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். 22.அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 23.அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24.யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25.அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். 26.இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார் - யோவான் 13:21-26 



இப்படி இயேசு கிறிஸ்துவே நம்முடைய தாய் என்பதை அறிந்தவர்களாகவும், யோவானை போல் கர்த்தரின் மார்பில் சாய்ந்திளைப்பாறும் அனுபவம் இருந்தால் மாத்திரமே, இயேசு கிறிஸ்து சொன்ன "அதோ உன் தாய்" என்பதின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள முடியும்,  ஏனென்றால் அவர்களை தான் ஒரு தாய் போல பிள்ளைகளே என்று அழைத்த இயேசு கிறிஸ்து, தான் மரணத்தை சந்திக்க வேண்டிய நேரம் வந்ததினால் கொஞ்சக்காலம் என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், ஆதியாகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட ஸ்திரீ தான் தான் என்பதையும், தான் வேதனையை ஏதிர்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்பதையும் விளக்கிச் சொல்லியிருந்தார் - 16.நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். 17.அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி: 18.கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள். 19.அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? 20.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். 21.ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22.அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான் - யோவான் 16:16-21 



இப்படி இயேசு கிறிஸ்துவின் பிள்ளையாக, அவரின் சிலுவை பாடுகளை கண்டு தாங்கொண்ணா துயரத்தில் இருந்த யோவானிடம், தான் உயிர்த்தெழும் வரையிலான கொஞ்ச காலத்திற்கு அவனை ஆறுதல்படுத்த "மரியாள், உன் தாய்" என்று சொன்னார், அதே போல தன்னை கருவில் சுமந்த மரியாளை தான் உயிர்த்தெழும் வரையிலான கொஞ்ச காலத்திற்கு ஆறுதல்படுத்த "யோவான், உன் மகன்" என்று சொன்னார் - 25.இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:25-30


இன்றைக்கும் சில பனி தளங்களில் வேலை செய்வோர், தான் விடுப்பில் செல்லும் பொழுது, தன்னுடைய பொறுப்பில் மற்றொருவரை நியமித்து விட்டு செல்வது கட்டாயமாக இருக்கிறது, அது போல தான் உயிர்த்தெழும் வரை யோவானை ஆறுதல்படுத்த கர்த்தர் சொன்னது தான்  "அதோ, உன் தாய்" என்பது.

இப்படி இயேசு கிறிஸ்து சொன்ன "அதோ, உன் தாய்" என்பது, யோவானை போல் இயேசு கிறிஸ்துவை நேசித்து அவரின் மார்பில் சாய்ந்திருப்பவர்களுக்கு, உயிர்த்தெழும் இயேசு கிறிஸ்து நம்முடைய நித்திய காலத்திற்கும் தாயாக இருக்க போகிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படுத்துவதாகவும், அதே சமயத்தில் இயேசு கிறிஸ்துவை நேசிக்காதவர்களுக்கோ, மரியாளையும் சீஷர்களையும் வழிபடச் செய்யும் காரியமாகவும், தேவகோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிற காரியமாகவும் இருக்கிறது.