ஏதேன் நதியின் விளக்கம்
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7
ஏதேன் நதியின் விளக்கம்
இந்த உலகத்தில் ஏத்தனையோ நதிகள் இருக்கும் பொழுது, ஏதேனிலிருந்து ஓடின ஒரு நதியை குறித்தும், அதிலிருந்து பிரிந்த நாலு பெரிய ஆறுகளையும் குறித்து சொல்லப்பட்டது, இயேசு கிறிஸ்துவையும் பிதாவாகிய திரியேக தேவனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலான நோக்கத்தினால் தான், இது சகரியா தீர்க்கதரிசியின் தரிசனத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. 13.இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14.மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் - ஆதியாகமம் 2:10-14
இதில் முதலாம் நதி இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு - ஆதியாகமம் 2:10-12
மற்ற மூன்று நதிகளாகிய கீகோன், இதெக்கேல், மற்றும் ஐபிராத்து நதிகள் பிதாவாகிய திரியேக தேவனை குறிக்கிறது, - 13.இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14.மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் - ஆதியாகமம் 2:10-14
இந்த மூவரும் தான், பொன், பிதோலாகும், மற்றும் கோமேதகக் கல்லாக இயேசு கிறிஸ்து என்கிற பைசோன் ஆற்றில் இருக்கிறார்கள், இதுவே இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை விளக்குவதாகவும் இருக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன்(வார்த்தை) விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும்(கிருபையும்), கோமேதகக்(சத்தியமும்) கல்லும் உண்டு - ஆதியாகமம் 2:10-12
அதனால் தான், ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் ஆதாமும் ஏவாளும் பாவத்தின் விளைவால் ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிடப்படும் முன்பே, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு இரட்சிப்பு உண்டு என்பதை விளக்கும் பொருட்டு, ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் இந்த பைசோன் ஆற்றில் பொன்(வார்த்தை) நல்லது என்றும், அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும்(கிருபையும் சத்தியமும்) உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது