நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்

யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர் எகிப்துக்குப் போனார்கள் என்று ஆதியாகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பொழுது, யாக்கோபையும் சேர்த்து 70 பேர் என்கிற எண்ணிக்கை சரியாக தானே இருக்கிறது என்று சொல்லிக்கொண்டார்கள் - 7.அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். 8.எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன். 9.ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். 10.சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள். 11.லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். 12.யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 13.இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள். 14.செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள். 15.இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான்அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர். 16.காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள். 17.ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள். 18.இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள். 19.யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். 20.யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள். 21.பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள். 22.ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர். 23.தாணுடைய குமாரன் உசீம் என்பவன். 24.நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள். 25.இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர். 26.யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர். 27.யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர் - ஆதியாகமம் 46:26-27

ஆனால் யாத்திராகமம் புஸ்தகத்தில் யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய 70 பேர் எகிப்துக்குப் போனார்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது, அதாவது யாக்கோபை சேர்க்காமல்,  அவரின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் தொகை மாத்திரமே 70 ஆக இருந்ததாம், ஆனால் கொடுக்கப்பட்ட பெயர்களின் தொகையோ 69 ஆகவே இருந்தது - 1.எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா, 2.இசக்கார், செபுலோன், பென்யமீன், 3.தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. 4.இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள். 5.யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர் - யாத்திராகமம் 1:1-5

அப்படியென்றால் வேதாகமம் ஏன் யாக்கோபின் கர்ப்பப் பிறப்பானவர்களின் தொகை 70 என்று சொல்லுகிறது என்று பார்த்தாள், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாக அவர்களுடன் சென்றதினால் தான் - 1.இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். 2.அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான். 3.அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். 4.நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார் - ஆதியாகமம் 46:1-4


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்த தீர்க்கதரிசனம்

இதை இன்னும் ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது, அதில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்த ரகசியமும் அதில் அடங்கி இருந்தது, யாக்கோபின் 4 மனைவிகளின் மூலமாய் பிறந்தவர்களிடத்தில் எந்த குடும்பத்தில் ஒரு நபர் குறைவு பட்டிருந்தார் என்று பார்க்கும் பொழுது, அது லேயாளின் சந்ததியாரிடத்திலேயே அந்த ஒரு எண்ணிக்கை குறைவு பட்டிருந்தது, எப்படியென்றால் லேயாளின் சந்ததியார் 33 பேர் என்று சொல்லப்பட்ட இடத்தில 32 பேர் மாத்திரமே இருந்தார்கள், அதற்க்கு காரணம் லேயாளுக்கு பிறந்தவர்களிடத்தில், குறிப்பாக யூதாவின் குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்களும் காரணமாக இருந்தது - 8.எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன். 9.ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். 10.சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள். 11.லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். 12.யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 13.இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள். 14.செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள். 15.இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான்அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர் - ஆதியாகமம் 46:8-14

இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகவும் இருக்கிறது, எப்படி என்றால் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து யாக்கோபின் ஒரு குடும்பத்தாராக, அதிலும் குறிப்பாக லேயாளின் சந்ததியாராக, அதிலும் யூதாவினுடைய குமாரன் என்கிற அடையாளத்தோடு இந்த பூமிக்கு வரப்போகிறார் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறது.