பரலோகத்தின் விளக்கம்
தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில், மூன்று முறை பரலோகமானது, நீர் என்னுடைய நேசகுமாரன் என்றும், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்றும், மகிமைப்படுத்தினேன் என்றும் சொன்னதை வேதாகமத்தில் பார்க்கலாம், இப்படி பரலோகமானது மூன்று முறை அறிக்கையிட்டது, நம் பரலோக தேவனின் திருத்துவத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
இதில், இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் துவக்கத்தில், அதாவது கர்த்தர் ஞானஸ்நானம் பெற்ற பொழுது, வானத்திலிருந்து நீர் என்னுடைய நேசகுமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று சொன்னது பரிசுத்த ஆவியானவர் என்று வேதாகமம் சொல்லுகிறது - 9.அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10.அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். 11.அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று - மாற்கு 1:9-11
அதே சமயத்தில், இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் இறுதியில், அதாவது கர்த்தர் சிலுவைக்குப் போகும் முன்பு, வானத்திலிருந்து மகிமைப்படுத்தினேன் இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்று சொன்னது பிதா என்று வேதாகமம் சொல்லுகிறது - 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று - யோவான் 12:27-28
இப்படி இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் துவக்கத்தில் பரிசுத்த ஆவியானவரும், இறுதியில் பிதாவும், காணக்கூடாத தெய்வமாக வானத்திலிருந்து நீர் என்னுடைய நேசகுமாரன் என்றும், மகிமைப்படுத்தினேன் என்றும் அறிக்கையிட்டவர்கள்.
ஆனால் நம் பரம பிதாவாகிய திரியேக தேவனில், வார்த்தையானவர் ஒளியுள்ள ஒரு மேகமாக, இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில், இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அறிக்கையிட்டார் - 1.ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2.அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 3.அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4.அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5.அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று - மத்தேயு 17:1-5
இந்த மேகமானவரே, மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம் - 4.அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5.ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். 6.அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7.அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8.பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். 9.இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது - அப்போஸ்தலர் 1:4-9