வேவுகாரரின் விளக்கம்

இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்  


நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7

குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7



வேவுகாரரின் விளக்கம்

பரிசுத்த வேதாகமத்தில், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்தும் அவரின் திருத்துவதை குறித்தும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பிய இஸ்ரவேல் புத்திரர், அங்கேயிருந்து ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியையும், அதனோடு மாதளம் மற்றும் அத்திப்பழங்களையும் கொண்டுவந்தார்கள், இது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது, எப்படியெனில் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் வாசம் செய்ததை தான் குறிக்கிறது - 17.அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, 18.தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், 19.அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், 20.நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது. 21.அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து, 22.தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. 23.பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். 24.இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது - எண்ணாகமம் 13:17-24


மேலும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் நமக்கு கிடைத்த கிருபையையும் சத்தியத்ததையும் குறித்து தான், இஸ்ரவேல் புத்திரர் அது பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று சாட்சி பகிர்ந்தார்கள் - 25.அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். 26.அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27.அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி - எண்ணாகமம் 13:25-27



இப்படி இஸ்ரவேல் புத்திரர் ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியையும், அதனோடு மாதளம் மற்றும் அத்திப்பழங்களையும் கொண்டு வந்ததை, எபிரேய பாஷையில் வார்த்தையையும், கனிகளையும் கொண்டு வந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது - At the end of forty days they returned from spying out the land. And they came to Moses and Aaron and to all the congregation of the people of Israel in the wilderness of Paran, at Kadesh. They brought back WORD to them and to all the congregation, and showed them the FRUIT of the land. And they told him, We came to the land to which you sent us. It flows with milk and honey, and this is its fruit - Numbers 13:25-27



Look, the Lord your God has set the land before you; go up and possess it, as the Lord God of your fathers has spoken to you; do not fear or be discouraged. And every one of you came near to me and said, ‘Let us send men before us, and let them search out the land for us, and bring back word to us of the way by which we should go up, and of the cities into which we shall come. The plan pleased me well; so I took twelve of your men, one man from each tribe. And they departed and went up into the mountains, and came to the Valley of Eshcol, and spied it out. They also took some of the FRUIT of the land in their hands and brought it down to us; and they brought back WORD to us, saying, It is a good land which the Lord our God is giving us - Deuteronomy 1:21-25