இஸ்லாம் மதத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது

கிறிஸ்தவர்கள் பலரும், இஸ்லாம் மதத்தை குறித்து ஒரு நல்லெண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், இதற்கு காரணம் வேதாகமத்தின் சொல்லப்பட்டுள்ள பல தீர்க்கதரிசிகள், மற்றும் ராஜாக்களின் பெயர்கள் குரானிலும் இடம் பெற்றிருப்பதால் தான், ஆனால் குரானில் உள்ள மிகமுக்கியமான வித்தியாசம் என்னவென்றால், இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரிக்கவில்லை என்பது தான், இந்த போதனை வேதாகமம் பிரசங்கியாத வேறொரு இயேசுவை குறித்ததாகவும், ஏவாளை வஞ்சித்த சர்ப்பத்தின் போதனையாகவும் இருக்கிறது - 3.ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 4.எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே - II கொரிந்தியர் 11:3-4


முகமது நபியை குறித்து

கிறிஸ்துவுக்குப் பின்பு ஏறக்குறைய 500 ஆண்டுகள் கழித்து, இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரிக்கவில்லை என்பதை அடிப்படை போதனையாக கொண்டு இஸ்லாம் மதத்தை துவக்கியவர் தான் முகமது நபி, இப்படி வரப்போகிற காரியங்களை முன்னறிந்த தேவன், தம்முடைய சுயரத்தத்தினாலே ஏற்படுத்தின இரட்சிப்புக்கு மாறுபாடானவைகளைப் போதிப்பவர்கள் எழுப்புவார்கள் என்பதை மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும் என்று எச்சரித்துள்ளார் - 28.ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 29.நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30.உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன் - அப்போஸ்தலர் 20:28-30


குரானை குறித்து

அது மாத்திரம் இல்லாமல், கிறிஸ்துவுக்குப் பின்பு ஏறக்குறைய 500 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட இஸ்லாம் மதத்தின் கருத்தை, அதாவது இயேசு கிறிஸ்து சிலுவை மரணம் அடைய வேண்டியதில்லை என்கிற அதே கருத்தை, பேதுரு ஒருமுறை இயேசு கிறிஸ்துவிடம் சொன்னபொழுது,  இயேசு கிறிஸ்து சொன்ன பதில் குரான் புஸ்தகம் யாருடையது என்பதையும், அது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் காண்பிக்கிறது -  21.அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22.அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 23.அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் - மத்தேயு 16:21-23


மசூதியை குறித்து

இன்று ஏருசலேமில் இருக்கிற மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த தேவாலயத்தை பார்த்து இது பாழாக்கிவிடப்பட்ட இடமாக மாறிவிடும் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருந்தார், இப்படி கர்த்தர் சொன்ன தீர்க்கதரிசனம் ஏறக்குறைய 1000 ஆண்டுகள் கழித்து அங்கு மசூதி கட்டப்பட்டதினால் நிறைவேறியது, இதிலிருந்து இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரிக்கவில்லை என்று சொல்லுகிற மதத்தின் ஆலயம் தேவனுடைய பார்வையில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 37.எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. 38.இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும் - மத்தேயு 23:37-38


இப்படி இஸ்லாம் மதமானது தேவனுடைய சுயரத்தத்தினால் உண்டான இரட்சிப்பை மறைத்து மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லக்கூடியது என்று அப்போஸ்தலனாகிய பவுலும் தீர்க்கதரிசனமாக எழுதியுள்ளார் - ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே - கலாத்தியர் 4:25


மேலும், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களையும், அடையாளங்களையும் கேள்விப்பட்டும், அவரை தேவன் என்று ஏற்றுக் கொள்ளாமல், ஒரு தீர்க்கதரிசி என்றோ, அல்லது ஒரு விசேஷித்த நபர் என்றோ சொன்னவர்களின் முடிவை குறித்து தான் கோராசினே! உனக்கு ஐயோ என்று இயேசு கிறிஸ்துச் சொன்னார், அது கந்தகத்தாலும் அக்கினினாலும் அளிக்கப்பட்ட சோதோமின் முடிவை காட்டிலும் மோசமாக இருக்கும்.