உன் சந்ததியைப் பூமியின் தூளைப்[மண்ணைப்] போல
14.லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். 15.நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, 16.உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். 17.நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். 18.அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான் - ஆதியாகமம் 13:14-18
கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த இந்த வாக்குத்தத்ததிலுள்ள, "உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்" என்பதின் அர்த்தம் தான் என்ன? இதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துக்கொள்ள, மூல பாஷையாகிய எபிரேய மொழியிலோ, அல்லது ஆங்கில மொழியிலோ படிப்பது நல்லது, அதன் படி கர்த்தர் ஆபிராகாமிடம் சொன்னது என்னவென்றால் "I will make thy seed as the dust of the earth: so that, if a man can number the dust of the earth, then shall thy seed also be numbered", அதாவது, "உன் சந்ததியை பூமியின் மண்ணை போல் இருக்கச் செய்வேன், அதனால், ஒருவன் பூமியின் மண்ணை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்", என்பதே உண்மையான அர்த்தமாய் இருக்கிறது
யார் அந்த சந்ததி?
13.மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். 14.ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. 15.சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை. 16.ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே - கலாத்தியர் 3:13-16
இப்படி, கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த இந்த வாக்குத்தத்ததில், "சந்ததி" என்பது ஈசாக்கையோ அல்லது இஸ்மவேலையோ குறிக்காமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது
காரியம் இப்படியிருக்க, இந்த சந்ததியின் ஆசீர்வாதத்தை மாம்ச பிரகாரமாய் எண்ணி, இன்றைக்கும் பலர் நாங்கள் தான் ஈசாக்கின் வம்சத்தார் என்றும், அப்படியல்ல, ஈசாக்கிற்கு முன்பே எங்களுடைய தகப்பனாகிய இஸ்மவேல் பிறந்து விட்டார், அதனால் நாங்கள் தான் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள் என்று பலரும் பெருமை பாராட்டிக்கொண்டிருக்கும் பொழுது, எந்த தகுதியும் இல்லாத நமக்கு, தேவன் தன்னுடைய குமாரனையுடைய ஆசீர்வாதத்தையும் நித்திய ஜீவனையும் தந்தருளினார் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்.
சந்ததி என்பது ஈசாக்கையோ அல்லது இஸ்மவேலையோ குறித்தது அல்ல
10.யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 11.ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். 12.அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 13.அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14.உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15.நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 16.யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 17.அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான் - ஆதியாகமம் 28:12-17
இப்படி கர்த்தர் ஆபிரகாமுக்கு, கொடுத்த வாக்குத்தத்தமானது, இயேசு கிறிஸ்துவை குறித்ததேயன்றி ஈசாக்கையோ அல்லது இஸ்மவேலையோ குறித்தது அல்ல, என்பதற்காகவே, கர்த்தர் யாக்கோபிடமும் இந்த வாக்குத்தத்தை மறுபடியும் சொன்னார், இதன் உண்மையான அர்த்தத்தை ஆங்கிலத்தில் பார்ப்போமானால், "Thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south: and in thee and in thy seed shall all the families of the earth be blessed"என்று சொல்லப்பட்டுள்ளது, இங்கும் கர்த்தர் ஆபிரகாமிடம் சொன்னது போலவே, யாக்கோபிடமும் "உன் சந்ததி பூமியின் மண்ணை போல இருக்கும், நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்" என்று சொன்னதை பார்க்கிறோம்.
கர்த்தர் ஆபிரகாமிடமும் யாக்கோபிடமும் கொடுத்த வாக்குத்தங்களில் "உன் சந்ததியை(இயேசு கிறிஸ்துவை) பூமியின் மண்ணை போல் இருக்கச் செய்வேன்" என்று ஏன் சொல்ல வேண்டும்? இந்த உலக பெற்றோரிடம், உங்களுக்கு பிறக்கும் பிள்ளையானது தங்கம் போல, வைரம் போல, அல்லது வைடூரியம் போல் இருக்கும் என்றால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் உங்கள் பிள்ளை மண்ணை போல் இருக்கும் என்று சொன்னால் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஆனால் இங்கு ஆபிரகாமிடமும் யாக்கோபிடமும் உன் பிள்ளை(சந்ததி) மண்ணை போல் இருக்கும் என்று கர்த்தர் சொன்ன பொழுது, அவர்கள் அதை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டார்களாம், இதை இயேசு கிறிஸ்து யூதர்களிடம் சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.
37.நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். 38.நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். 39.அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. 40.தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே - யோவான் 8:37-40
மண்ணைப் போல் என்றால் என்ன?
17.பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18.அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 19.நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார் - ஆதியாகமம் 3:17-19
வேதாகமத்தின் படி, மண் என்பது இந்த பாவ பூமியில், மரணத்தின் பிடியில் இருக்கிற மனிதர்களை குறிப்பதாய் இருக்கிறது, அதனால் தான் தேவன் ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தை கொடுத்தார் "I will make thy seed as the dust of the earth: so that, if a man can number the dust of the earth, then shall thy seed also be numbered", அதாவது தேவனே மனித சாயலில் வெளிப்பட்டு நம்மை இரட்சிப்பார், நம்மை பெருகச் செய்வார், என்று வாக்குத்தத்தம் கொடுத்தார்.
மண்ணைத் தின்பாய்
14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15.உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் - ஆதியாகமம் 3:14-15
மேலும் இந்த பாவ சாயலான மனிதனுக்கு மரணம் என்கிற மண்ணுக்குத் திரும்புவாய் என்கிற சாபமும் இருக்க தான் செய்கிறது, அதெப்படியெனில், தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதன் கீழ்ப்படியாமையினால் பாவசாயலாய் மாறின பொழுது, அவனை வஞ்சித்த சத்ருவிடம், தேவன் அதிகமாய் ஒன்றும் சொல்லாமல் மண்ணைத் தின்பாய் என்று சொன்னதினால் அவன் மரணத்தின் அதிகாரியாய் மாறிப்போனான், மேலும், இது எல்லா மனிதர் மேலும் விழுந்த சாபமாகவும் இருக்கிறது.
அதே சமயத்தில், தேவ குமாரனை குறித்து "மண்ணை போல்" என்று சொல்லும் பொழுது, தேவ குமாரனும் மரணத்தை ருசிக்க வேண்டும் என்கிற இரகசியத்தையும் உள்ளடக்கியதாய் இருக்கிறது
பூமியின் மண்ணைப் போல் என்றால் என்ன?
44.ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. 45.அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 46.ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. 47.முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். 48.மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. 49.மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம் - I கொரிந்தியர் 15:44-49
மேலும் அவரை "மண்ணை போல்" என்று சொல்லாமல் "பூமியின் மண்ணை போல்" என்று சொல்லக் காரணம் என்ன? ஏனென்றால் அவர் இந்த பாவ பூமிக்குரியவர் அல்ல, அதனால் தான் வானவராகிய இயேசு கிறிஸ்து மண்ணான மனிதனின் சாயலை எடுத்ததார் என்று வேதாகமம் சொல்லுகிறது.