பிரேதமான என்னுடையவர்களோடே
இந்த தீர்க்கதரிசனத்தில், தேவன் பிரேதமான என்னுடையவர்களோடே என்று சொல்லும் பொழுது, அது புரிந்துக் கொள்ள முடியாததாய் தான் இருந்தது - மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும் - ஏசாயா 26:19
ஆனால் இந்த தீர்க்கதரிசனமே தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிறைவேறிற்று, அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த போது நித்திரையடைந்திருந்த பரிசுத்தவான்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டது "மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்" என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவே இருந்தது - 50.இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52.கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53.அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள் - மத்தேயு 27:50-53