சவுல் ராஜாவின் சந்ததியார்

சவுலும் ஆரோனும் அபிஷேகம் செய்யப்பட்டதின் சிறப்பே அவர்களின் சந்ததியார் மூலமாக இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றி முடிக்க தான், இது மனுஷ ஞானத்திற்கு அப்பாற்பட்ட காரியம், இதை நிறைவேற்றி முடிக்க தேவனால் மாத்திரமே கூடும் - அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார் - உபாகமம் 18:5 



அதனால் தான் சவுல் ராஜாவின் ஊழியக்காரர்கள் எல்லோரும் தாவீதை கொலை செய்ய தேடிக்கொண்டிருந்த பொழுது, யோனத்தானால் தாவீதை கண்டு கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ண முடிந்தது - 15.தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 16.அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: 17.நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். 18.அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான் - I சாமுவேல் 23:15-18

அதன் பின்பு, யோனத்தானின் குமாரனாகிய மேவிபோசேத்தும் தாவீதுக்காக உபவாசத்தோடு காத்திருப்பவராக இருந்தார் - சவுலின் குமாரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை - II சாமுவேல் 19:24

 

சவுல் பெற்ற அபிஷேகம் தான் அவர் சந்ததியை காப்பாற்றினது,  அதனால் தான் முடமாயிருந்த மேவிபோசேத்திற்கு மீகா என்கிற மகனை கொடுத்து கர்த்தர் ஆசிர்வதித்தார் - 12.மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள். 13.மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது - II சாமுவேல் 9:12-13

 

அதன் பின்பு சில தலைமுறைகளிலேயே, சவுலின் சந்ததியார் நூற்றைம்பதுபேராய் பெருகிப் போனார்கள் - 34.யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். 35.மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். 36.ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலெமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 37.மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல். 38.ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர். 39.அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே. 40.ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர் - I நாளாகமம் 8:34-40


 

இப்படி கீசின் ஒரே குமாரனாகிய சவுல் ராஜாவின் சந்ததியார் தான் மொர்தெகாய் மற்றும் எஸ்தர் போன்றவர்கள், இவர்கள் மூலமாக கர்த்தர் பெரிய இரட்சிப்பை யூதாவுக்கு கட்டளையிட்டார், இப்படியாக சவுல் ராஜாவின் சந்ததியார் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டார்கள் - 5.அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். 6.அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். 7.அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான் - எஸ்தர் 2:5-7