என் வஸ்திரங்களைத் தொட்டது யார்?

தெய்வம் இந்த பூமிக்கு வந்த பொழுது அவருக்கு ஏதிராக தேவாலயங்கள் செயல்பட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் உண்மையில் அது தான் நடந்தது, எப்படியெனில் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த பொழுது, அவரை யாராவது ஏற்று கொண்டால், ஏற்று கொண்டவர்களை ஜெபஆலயத்துக்குள் அனுமதிக்க கூடாது என்று யூதர்கள் கட்டுப்பாடு செய்திருந்தார்கள் - ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள் - யோவான் 9:22b

அதில் மிகவும் தீவிரமாக இருந்தது பரிசேயர் என்கிற அதிதீவிரமான மதப்பிரிவை சேர்ந்தவர்கள் - ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள் - யோவான் 12:42

அப்படி ஜெபஆலயங்கள் தெய்வத்திற்கு விரோதமாக கட்டாய படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில் தான், ஒரு ஜெபஆலயத்தலைவன் இயேசுவை தேடி வந்தார், அந்த ஜெபஆலயத்தலைவன் நிச்சியமாகவே ஒரு வயது முதிர்ந்தவராகத் தான் இருந்து இருக்க வேண்டும், காரணம் ஒருவர் வயது முதிர்ந்தவராகவும் இனிமேல் வேறு குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில் தான் அவரது மகளை குறித்து சொல்லும் பொழுது "ஒரே மகள்" என்று குறிப்பிடுவார்கள், அப்படி வயது முதிர்ந்தவராகவும், ஜெபஆலயத்தலைவனாகவும் இருந்த யவீரு, ஏறக்குறைய 31 வயது நிறைந்த இயேசுவின் பாதத்தில் விழுந்தார் என்றால் அது ஆச்சரியமான காரியமம் தான் - 22.அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: 23.என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 24.அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று அவரை நெருக்கினார்கள் - மாற்கு 5:22-24

அப்படி ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு கர்த்தரை தேடி வந்த நேரத்தில் தானே, அவரின் மகள் மரித்து போய், ஒருவன் அந்த துக்க செய்தியை கொண்டு வந்துக் கொண்டிருந்தான். மகளின் மரண செய்தியை கேள்விப்பட்டால் யவீரு எவ்வளவு வேதனை படுவார் என்பதையும், அவர் தன் விசுவாசத்தை விட்டு விட்டு மகளைக் காண ஓடி விடுவார் என்பதையும் இயேசு கிறிஸ்து அறிந்து இருந்தார், அந்த அவிசுவாச சூழ்நிலையில் இருந்து கர்த்தர் யவீருவை எப்படி காப்பாற்றினார் என்பதை பார்ப்போம் - 25.அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, 26.அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, 27.இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; 28.ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 29.உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள் - மாற்கு 5:25-29

யவீருவின் 12 வயது மகளை குணப்படுத்த போகிற வழியில், இயேசு கிறிஸ்து 12 வருடம் வியாதியாய் இருந்த ஸ்திரீயை குணப்படுத்தி, சுகம் பெற்ற ஸ்திரீயை சாட்சி சொல்ல அழைத்தார், மாற்கு இந்த சம்பவத்தை குறித்து சொல்லும் பொழுது, இயேசு கிறிஸ்து தன் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டதாக குறிப்பிட்டு இருந்தார், ஒரு மனிதனால் தன் சரீரத்தை தொடுவதை தான் உணர முடியும், ஆனால் இயேசு கிறிஸ்துவோ தன் வஸ்திரங்களைத் தொடுவதையும் உணரக்கூடிய தெய்வமாக இருந்தார் என்று சொல்லியுள்ளார் -  30.உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். 31.அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32.இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். 33.தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். 34.அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார் - மாற்கு 5:30-34  


சுகம் பெற்ற ஸ்திரீ, தனது 12 வருட பெரும்பாடு நின்று போனதை குறித்து சொன்ன சாட்சி,  யவீருவிற்கு இயேசு கிறிஸ்து தனது 12 வயது மகளின் வாழ்க்கையில் நிச்சியமாகவே அற்புதம் செய்வார் என்கிற அசைக்க முடியாத விசுவாசத்தை கொடுத்தது,  அதனால் தான் தன் மகளின் மரண செய்தியை கேட்ட பொழுதும், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்று கேட்ட பொழுதும், இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்ப்பவராகவே இருந்தார் - அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள் - மாற்கு 5:35

இப்படி யவீருவை விசுவாசத்தில் பலப்படுத்தி, அவன் மகளை உயிரோடு எழுப்பினார் நம் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து - 36.அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; 37.பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; 38.ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39.உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 40.அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, 41.பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 42.உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார் - மாற்கு 5:37-42


அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள்

அந்த சிறு பெண்ணின் வயது 12 என்று அறிந்த பொழுது, சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியம் தான், ஏன் என்றாள் வரும் வழியில் இயேசு கிறிஸ்து குணமாக்கிய ஸ்திரீயும் தன் சாட்சியில் தனது 12 வருட உதிரபோக்கு வியாதியை குறித்து சொல்லியிருந்தாள், இப்படி இயேசு கிறிஸ்து யவீருவின் விசுவாசத்தை பலப்படுத்திய விதம் மனித ஞானத்திற்கு அப்பாற்ப்பட்ட காரியமாகவே இருந்தது - .உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார் - மாற்கு 5:42

அவள் இரட்சிக்கப்படுவாள் 


இந்த சம்பவத்தில் யவீருவிற்கு, தன் மகள் பிழைக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது, ஆனால் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கோ நமது இரட்சிப்பே நோக்கமாய் இருக்கிறது, அதாவது நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதே நோக்கமாய் இருக்கிறது, அதனால் தான் இரட்சிப்பை குறித்துப் பேசினார் - இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார் - லூக்கா 8:50

அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்


மரித்து உயித்தெழுந்த ஒரே மகளுக்கு பெற்றோர் ஆகாரங்கொடுக்காமலா இருப்பார்கள்? பின்பு ஏன் இயேசு கிறிஸ்து யவீருவின் மகளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்? இயேசு கிறிஸ்து ஆகாரங்கொடுங்கள் என்று சொன்னது, நம் நித்தியஜீவனுக்கான ஆகாரத்தை குறித்ததாய் இருந்தது, அதாவது நாம் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதாய் இருந்தது - 48.ஜீவ அப்பம் நானே. 49.உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50.இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. 51.நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். 52.அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். 53.அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54.என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55.என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56.என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன் - யோவான் 6:48-56


ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு


மரித்த தன் மகள் உயிர்தெழ இயேசு கிறிஸ்துவால் கூடும் என்கிற விசுவாசத்தோடு யவீரு இருந்தார், ஆனால் அதற்குள்ளாக தாரை ஊதுகிறவர்களின் சத்ததினால் யவீருவின் வீட்டில் பெரிய கூட்டம் கூடிவிட்டது, அவர்களை பார்த்து இயேசு கிறிஸ்து "சிறு பெண் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள்" என்ற பொழுது, தங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமும் இல்லை, யவீருவின் துக்கத்திலும் பங்கில்லை என்பதை நகைத்து வெளிப்படுத்தினார்கள், இப்படி விவசுவாசம் இல்லாத மக்கள் துரத்தப்பட்டபின்பு தான் உயிர்த்தெழுதலின் தேவனாகிய இயேசு கிறிஸ்து அற்புதம் செய்தார்  - 23.இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு: 24.விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். 25.ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள் - மத்தேயு 9:23-25 


ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்


ஆனால் இப்பொழுது இயேசு சொல்லுவதோ யாராலும் செய்ய கூடாத காரியம், ஏன் என்றாள் வெளியே ஒரு கூட்ட மக்கள் இருக்கும் பொழுது, மகள் உயிரோடு எழும்பினதை எப்படி மறைக்க முடியும்? - 54.எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55.அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56.அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் - லூக்கா 8:54-56


ஆனால் அவர்கள் கதவை திறந்தவுடன் தான் அடுத்த அற்புதமும் நடந்தது, வெளியே இருந்து யவீருவின் மகள் உயிரோடு இருக்கிறதை பார்த்த நகைத்த கூட்டத்தின் தலைவன், இயேசு சொன்னது சரிதான் போல, சிறு பெண் நித்திரையாய் தான் இருந்திருக்கிறாள் என்று சொல்லி எல்லோரையும் அனுப்பிவிட்டான், அப்படி நகைத்தவர்களுக்கு இயேசு ஒரு சாதாரண மனிதர் தான், ஆனால் யவீருவின் குடும்பத்தாருக்கோ இயேசு கிறிஸ்து, வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள தேவன்.


அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று

நகைத்தவர்களுக்கு இயேசு ஒரு சாதாரண மனிதராக தான் காணப்பட்டார், அவர்களிடம் யாராவது நடந்ததை கேட்டால், அந்த சிறு பெண் நித்திரையாயிருக்கிறாள், நாங்களோ மரித்து போனாள் என்று நினைத்தோம் என்று தான் சொல்வார்கள், அதே சமயத்தில் தேவனால் இழுத்துக் கொள்ளப்பட்டவர்களோ தேசத்தில் எங்கிருந்தாலும் சரி இந்த அற்புபத்தை கேட்டு இயேசுவை விசுவாசிக்க ஆரம்பித்தார்கள் - 25.ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். 26.இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று - மத்தேயு 9:25-26