சேவல் கூவுகிறதற்கு முன்னே

இயேசு கிறிஸ்துவின் வார்த்தையிலிருந்து, நடக்கப்போவதை யூகித்துக் கொண்ட பேதுரு கேட்டது தான் "நீர் எங்கே போகிறீர்" என்ற கேள்வி - 33.பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். 34.நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35.நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். 36.சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார் - யோவான் 13:33-36


அது மாத்திரம் இல்லாமல், கர்த்தர் தனக்காக மிகப்பெரிய பணிகளையும் திட்டங்களையும் வைத்திருக்கும் பொழுது, இப்பொழுதே என் ஜீவனை கொடுக்க போகிறேன் என்று சொன்னது நிச்சியமாகவே தேவனை துக்கப்படுத்த கூடிய காரியம் தான், அப்பொழுது கர்த்தர் சொன்னது தான் "இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய்" என்பது - 37.பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். 38.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் - யோவான் 13:37-38



இது எப்படி சாத்தியம் ஆகும்? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கூவாமல், எந்த நேரத்திலும் கூவு கூடிய சேவலை கொண்டு கர்த்தர் எப்படி தன் வார்த்தையை நிறை வேற்றினார்?

இதன் இரகசியத்தை அறிந்துக் கொள்ள, மூல பாஷையாகிய கிரேக்க மொழியில் சொல்லப்பட்டதை நாம் படிக்க வேண்டும், அதில் மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னை மூன்றுதரம் மறுதலிக்கும்வரை, சேவல் கூவுப்போகிறதில்லை (Truly, truly, I say to you, the rooster will not crow till you have denied me three times) என்று கர்த்தர் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது, அதாவது நீ என்னை மறுதலிக்கும் வரை ஒரு சேவல் கூட கூவப்போவதில்லை என்று சொன்னாராம்.

இது தெய்வத்தால் மாத்திரமே செய்யக்கூடிய காரியம் ஆச்சே, ஆமாம் சர்வவல்லமை பொருந்திய தேவனாகிய இயேசு கிறிஸ்து பேதுருவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே எல்லா சேவல்களுக்கும் கட்டளையிட்டதினால், எல்லா சேவல்களும் அமைதி காத்து கொண்டிருந்தன, கடைசியாக பேதுரு இயேசு கிறிஸ்துவை மறுதலித்தவுடன், கர்த்தரின் கட்டளையை பெற்றுக் கொண்டுத் தான் சேவல் மறுபடியும் கூவின - 25.சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான். 26.பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். 27.அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று - யோவான் 18:25-27

மாற்கு இதை குறித்துச் சொல்லும் பொழுது, இயேசு கிறிஸ்து சேவல்களுக்கு இரண்டுதரம் கட்டளை கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார் - 27.அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 28.ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். 29.அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். 30.இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 31.அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள் - மாற்கு 14:27-31


இயேசு கிறிஸ்து விசாரிக்கப்படுகிற பொழுது, முதலாவது பேதுரு அரமனைக்கு கீழே முற்றத்திலிருக்கும் சமயத்தில் இயேசு கிறிஸ்துவை எனக்கு தெரியாது என்று மறுதலித்து விட்டு வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான், அதனை அறிந்த கர்த்தர் வெளியே வாசல் மண்டபத்திலிருக்கும் சேவலுக்கு கட்டளை கொடுத்தார், உடனே அது கூவிற்று - 66.அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, 67.குளிர்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். 68.அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று - மாற்கு 14:66-68


அதன் பின்பு இயேசு கிறிஸ்துவை எனக்கு தெரியாது என்று பேதுரு இரண்டு முறை மறுதலித்தான், அதனையும் அறிந்த கர்த்தர் சேவலுக்கு மறுபடியும் கட்டளை கொடுத்து அதனை கூவச் செய்தார் - 69.வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். 70.அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். 71.அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். 72.உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான் - மாற்கு 14:69-72


இது பேதுருவுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்கிற பாடமாகவே இருந்தது, இப்படி பக்குவப்பட்டதினால் பேதுருவால் தனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய ஊழியத்தை செய்து முடிக்க முடிந்தது.