பொவனெர்கேஸ்
பரலோக தேவனாம் இயேசு கிறிஸ்து, செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு மற்றும் யோவானை பொவனெர்கேஸ் என்று அழைத்த பொழுது, ஏன் தங்களை அப்படி அழைத்தார் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை - செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் - மாற்கு 3:17
ஆனால் யாக்கோபும் யோவானும் தங்களுக்கு கர்த்தர் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டதை, அதாவது இடிமுழக்க மக்களென்று என்று அழைத்ததை தவறாக புரிந்துக் கொண்டு ஒருமுறை வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து மற்றவர்களை அழிக்க பார்த்தார்கள் - 51.பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, 52.தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53.அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54.அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 55.அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, 56.மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள் - லூக்கா 9:51-56
இப்படி பொவனெர்கேஸ் என்று அழைத்த இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்குப் போகும் முன்பு தான் அளித்த வரத்தை யோவானுக்கு விளங்க செய்தார், எப்படியெனில், பிதா இடிமுழக்க சத்தத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு பதிலளித்த பொழுது, எல்லோரும் இது இடிமுழக்க சத்தம் என்றார்கள், ஆனால் பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்ட யோவானோ அந்த இடிமுழக்க சத்தத்தை வியாக்கியானம் செய்து "மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்" என்று அதின் அர்த்தத்தை அறிந்துக் கொண்டார், அதனால் தான் இதன் அர்த்தம் யோவான் புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது - 24.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். 25.தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். 26.ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29.அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30.இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று - யோவான் 12:24-30
கர்த்தர் ஏன் இந்த வரத்தை யோவானுக்கு கொடுத்தார்? கர்த்தருக்குத் தெரியும் அப்போஸ்தலனாகிய யோவான் தன் முதிர் வயதிலே பத்மு தீவிலிருந்து பிதாவின் சத்தத்தை கேட்டு வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தை எழுத வேண்டும் என்று, அதனால் தான் யோவானை பொவனெர்கேஸ் என்று அழைத்து, பயிற்சியும் கொடுத்தார் - 10.அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 11.மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 12.ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன் - வெளி 12:10-12
பத்மு தீவிலே உண்டான அந்த சத்தம் மற்றவர்களுக்கு அது ஒரு எக்காளசத்தம் அல்லது இடிமுழக்க சத்தம் போல் தான் இருந்திருக்கும், ஆனால் யோவானுக்கோ அது ஒரு பரலோகத்தின் பாஷையாக வெளிப்பட்டது - கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன் - வெளிப்படுத்தின விசேஷம் 1:10
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது - வெளிப்படுத்தின விசேஷம் 4:1
6.அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். 7.நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். 8.சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9.பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான் - வெளி 19:6-9
தேவன் யோவானை பயன்படுத்திய விதம்
இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தின் துவக்கத்தில் ஜனங்களுக்கு செய்த மலை பிரசங்கம் மத்தேயுவின் புஸ்தகம் 5, 6, 7ம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது, அதே போல இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு போகும் முன்பு தன்னுடைய சீஷர்களுக்கு செய்த போதனை யோவான் 13, 14, 15, 16, 17ம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது, இது ஒரு நீண்ட போதனையாகவும், எந்த ஒரு மனிதனாலும் ஒரு முறை கேட்டு அப்படியே எழுத முடியாததாகவும் இருக்கிறது, அதனால் இதை தேவனுடைய கிருபையினாலும் பரிசுத்த ஆவியானவரின் துணையினாலும் யோவான் எழுதினார் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.