திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலா?
திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் கிடையாது என்பது தான் இதற்கான பதில்
திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் கிடையாது என்பது தான் இதற்கான பதில்
திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலா என்ற கேள்விக்கு நாம் அதிகம் ஆராய வேண்டியதோ அல்லது மற்றவர்களின் கருத்தையோ கேட்க வேண்டிய அவசியமோ இல்லை, இதற்கான பதிலை திருவள்ளுவரே திருக்குறளில் சொல்லிருக்கிறார், எப்படியெனில் திருவள்ளுவர் தன் தெய்வத்தை குறித்து சொல்லும் பொழுது தன் தெய்வத்தால் செய்ய முடியாத காரியங்கள் அநேகம் உண்டு என்று அவரே திருக்குறள் 619ல் சொல்லி இருக்கிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் - குறள் எண் 619
ஆனால் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவால் முடியாத காரியம் என்று ஒன்றே கிடையாது, கர்த்தரால் மனிதனாக பிறக்கவும் முடியும், மரணத்தை வெல்லவும் முடியும், நம்மை பரலோக இராஜ்யத்திற்கு அழைத்து செல்லவும் முடியும் என்கிற பரமரகசியத்தை தான் இந்த வேதவசனத்தில் பார்க்கிறோம்.
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார் - மாற்கு 10:27
தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான் - லூக்கா 1:37
இப்படி அடிப்படை கருத்தியிலேயே வேறுபாடு இருக்கும் பொழுது, திருக்குறள் எப்படி ஒரு கிறிஸ்தவ நூலாக இருக்க முடியும்? அதனால் வேத புஸ்தகத்தை மாத்திரம் படியுங்கள் காலத்தை பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள்