நீ கேபா என்னப்படுவாய்
ஏன் இயேசு கிறிஸ்து யோனாவின் மகனாகிய சீமோனுக்கு பாறை(கற்பாறை) அர்த்தம் கொள்ளும் பேதுரு என்று பெயரிட்டார்? 35.மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36.இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 37.அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38.இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39.அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. 40.யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41.அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42.பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு(கல்) என்று அர்த்தமாம் - யோவான் 1:35-42
இன்று உலகமெங்கும் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான ஜெபங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கப்படுகின்றன, ஆனால் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்பு எல்லோரும் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் பேதுருவை கொண்டு தான் இந்த முதல் ஜெபத்தை ஏறெடுக்கச் செய்தார், இப்படி சபைக்கு அடித்தளமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கும் இரகசியத்தை முதலாவது செய்த பேதுருவை, இயேசு கிறிஸ்து பாறை(கற்பாறை) என்று அழைத்தது சரி தானே? - 1.ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2.அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3.தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4.பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5.அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6.அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7.வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8.அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான் - அப்போஸ்தலர் 3:1-8
இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்
இயேசு கிறிஸ்து பேதுருவிடம் "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்" என்று சொன்னதினால், பேதுருவை போல் ஒருவர் எப்பொழுதும் சபைக்கு தேவை என்று எண்ணி போப்பாண்டவர் என்கிற தலைமைபொறுப்பு கத்தோலிக்க மதத்தில் உருவாக்கப்பட்டது - 13.பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20.அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் - மத்தேயு 16:13-20
ஆனால் இயேசு கிறிஸ்து "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்" என்று சொன்னது, பேதுருவை குறித்தா அல்லது பேதுருவிடம் இருந்த விசுவாசத்தை குறித்ததா என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று தான், ஏன் என்றால் அடுத்த வசனத்திலேயே பேதுரு சாத்தானே என்று அழைக்கப்பட்டான், அப்படி இருக்கும் பொழுது சபையானது எப்படி பேதுருவின் மேல் கட்டப்படும் - 21.அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22.அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 23.அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் - மத்தேயு 16:21-23
இதை நன்றாய் ஆராய்ந்து பார்த்தால், இயேசு கிறிஸ்து "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்" என்று சொன்னது பேதுருவிடம் அல்ல, மாறாக பேதுருவிடம் இருந்த "அப்படி ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்கிற விசுவாசத்தின் மேல் தான் என்பதை அறிந்துக் கொள்ளலாம், அப்படி இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றும், அவர் ஒருவரே தேவன் என்றும் முழு மனதோடு நாம் கர்த்தரை சார்ந்திருக்கும் பொழுது, நிச்சியமாகவே பாதாளத்தின் வாசல்கள் கர்த்தரின் சபையை மேற்கொள்ளமுடியாது.