வேதாகமத்தில் பால்வெளி மண்டலம்
வேதாகமத்தை படிக்கும் பொழுது, இந்த முழு உலகத்தையும், அதாவது சூரியன், சந்திரன், நட்சத்திரம் உட்பட முழு பால்வெளி மண்டலத்தையும் கர்த்தர் ஆறே நாளில், அதாவது சரியாக 144 மணி நேரத்தில், அதுவும் ஏறக்குறைய 6000 BC மற்றும் 7000 BC ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் படைத்தார் என்பதாக தான் புரிந்துக் கொள்கிறோம்.
ஆனால் கதிரியக்கக் காலமதிப்பீட்டு முறையானது (radiometric dating, அல்லது radioactive dating) நாம் வசிக்கும் இந்த பூமியும் இதிலுள்ள பாறைகளும், பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானது என்று சொல்ல காரணம் என்ன? அதே போல தொல்லுயிர் எச்சம் அல்லது புதைபடிவங்களும் (Fossil), இந்த பூமியில் தாவரங்களும், விலங்குகளும் பல கோடி ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று சொல்ல காரணம் என்ன?
நாம் வசிக்கும் இந்த பூமியின் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக இருக்கிறது, அது இந்த பூமி பம்பரத்தைப் போல சுற்றி கொண்டிருப்பதாலும், அதன் சுற்றளவு மற்றும் சுற்றுகிற வேகத்தை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது, இந்த பூமியை போலவே, பால்வெளி மண்டலத்தில் ஏராளமான கோள்கள் இருக்கின்றன, ஒவ்வொரு கோளும் வெவ்வேறு சுற்றளவு கொண்டதாகவும், வெவ்வேறு வேகத்தோடும் சுற்றுகிறது, உதாரணத்திற்கு ஜூபிடர் என்கிற கோளுக்கு ஒரு நாள் என்பது 10 மணி நேரம், அதாவது ஜூபிடர் கோளானது ஒரு சுற்று சுற்றி முடிக்க அதற்கு 10 மணி தேவைப்படுகிறது, அதே சமயத்தில் வீனஸ் என்கிற கோளுக்கு ஒரு நாள் என்பது 5832 மணி நேரம், அதாவது வீனஸ் கோளானது ஒரு சுற்று சுற்றி முடிக்க அதற்கு 5832 மணி தேவைப்படுகிறது.
நாம் இந்த பூமியில் வசிப்பதினால் தேவனாகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் 144 மணி நேரத்தில் படைத்தாங்க என்று எப்படி சொல்ல முடியும்? அப்படியென்றால் வீனஸ் கோளின் கணக்கின்படி 6 நாள் என்பது 34,992 மணி நேரமாச்சே, அப்படி இருக்கும் பொழுது, முழு உலகமும் படைக்கப்பட்டது பூமியின் நாள் கணக்கின் படி என்கிற எண்ணத்தை விட்டு விட்டு, ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட படைப்பின் நாட்கள் எந்த கோளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
தேவனாகிய கர்த்தர் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை படைக்கும் முன்பே வெளிச்சத்தை படைத்தார் என்பதையும், அந்த வெளிச்சமே நாள் கணக்கின் ஆரம்பமாக அமைந்தது என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும், அப்படி பார்க்கும் பொழுது, ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில், படைப்பின் நாட்களுக்கு அடிப்படையாக இருந்த கோளானது பம்பரத்தைப் போல சுற்றி கொண்டிருப்பது மாத்திரம் இல்லாமல், ஒரு ஒளிர் விடும் சுடராகவும் இருந்திருக்க வேண்டும் - 3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4.வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5.தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:3-5
இந்த பால்வெளி மண்டலத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என பல வெளிச்சத்தை கொடுக்கும் கோள்கள் இருந்தாலும், பம்பரத்தைப் போல சுற்றி கொண்டே வெளிச்சத்தை கொடுக்கும் ஒரே ஒரு கொள் என்னவென்றால், அது பால்வெளி மண்டலமேயன்றி வேறொன்றும் இல்லை, அப்படியென்றால் படைப்பின் நாள் கணக்கு பால்வெளி மண்டலம் சுற்றுவதினால் உண்டாகும் நாள் கணக்கின் அடிப்படையிலானது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த பால்வெளி மண்டலம் தன் மையத்திலிருந்து (Galactic Center) வெளிச்சத்தை கொடுத்தவாறே பம்பரத்தைப் போல சுற்றி கொண்டிருக்கிறது, இந்த பால்வெளி மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும், அதாவது பால்வெளி மண்டலமானது ஒரு சுற்று சுற்றி முடிக்க நாம் வாழ்கிற இந்த பூமியின் கணக்கின் படி 240 மில்லியன் ஆண்டுகள் அல்லது 87,600,000,000 நாட்கள் அல்லது 2,102,400,000,000 மணி நேரம் தேவைப்படுகிறது.
அது மாத்திரம் இல்லாமல், வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து சூரியன் மற்றும் சந்திரனை நான்காவது நாளில் தான் படைத்தாங்க என்று பார்க்கிறோம், அப்படியென்றால் படைப்பின் முதல் மூன்று நாட்கள், சூரியனின் வெளிச்சத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வாய்ப்பே இல்லை, மாறாக அது பால்வெளி மண்டலம் சுற்று கணக்கின் படியே ஆகும் - 14.பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16.தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18.பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19.சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தர் சூரியன் மற்றும் சந்திரனை படைக்கும் முன்பே, மூன்றாவது நாளில் புல், பூண்டுகளையும், விருட்சங்களையும் உண்டாக்கினங்களாம், அது எப்படி சாத்தியம் ஆகும்? சூரியன் சந்திரன் இல்லாவிட்டால் பூமி எவ்வளவு குளிராக இருக்கும்? இதுவும் பூமியானது சுற்றுகிற பால்வெளி மண்டலத்தின் மையத்திற்கு அருகாமையில் இருந்தது என்கிற கண்டுபிடிப்பை உறுதி செய்கிறது, அதாவது இயேசு கிறிஸ்து புல், பூண்டுகளை உருவாக்கும் போது பூமியானது பால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்து உண்டான வெப்பத்தினால் ஒரு மிதமான வெப்பநிலையிலும், மரம் மற்றும் செடிகள் வளர தேவையான வெளிச்சத்தை பெற்றதையும் அறிந்துக் கொள்ளலாம் - 11.அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 12.பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13.சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:11-13
இது வரை பால்வெளி மண்டலம் எத்தனை சுற்றை முடித்துள்ளது?
இந்த கேள்விக்கு எந்த விங்ஞானியாலும், எந்த மதத்தினாலும் பதில் சொல்ல முடியாது, ஆனால் வேதாகமத்தில் மாத்திரமே இதற்கு பதில் உள்ளது, அதாவது பால்வெளி மண்டலமானது இது வரை 6 சுற்றுகளை முடித்து, தனது 7வது சுற்றை துவக்கியுள்ளது.
அப்படியென்றால் இந்த பால்வெளி மண்டலமானது 1440 மில்லியன் ஆண்டுகளாக (6 X 240 million years) இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அது மாத்திரம் இல்லாமல், வேதாகமத்தில் படி, இந்த பால்வெளி மண்டலத்தின் மூலப்பொருட்களெல்லாம், அது தன் இயக்கத்தை தொடங்குவதற்க்கு முன்பாக, அதாவது 1440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக படைக்கப்பட்டது என்பதையும், இவ்வளவு பழமையான பால்வெளி மண்டலத்தின் மூலப்பொருட்களிலிருந்து தான் நாம் வசிக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாமே ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கப் பட்டது.
பொதுவான பெயர்கள்: இதை இன்னும் விளக்கமாக அறிந்து கொள்வதற்கு முன்பு, வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்ட சில பொதுவான பெயர்களை அறிந்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு விதமான வானங்கள்: பால்வெளி மண்டலமானது சுற்றுவதற்கு ஒரு மிகப்பெரிய வானம்(Empty space) தேவை, அதே சமயத்தில் இந்த பால்வெளி மண்டலத்திற்குள் நாம் வசிக்கும் பூமி, போன்ற கோள்கள் சுற்றுவதற்கும் வானம்(Empty space) தேவை, இவ்விரண்டையுமே வேதாகமம் வானம்(ஆகாயவிரிவு) என்றே அழைக்கிறது.
இதில் முதலாவது வானமானது, பால்வெளி மண்டலம் சுற்றுவதற்காக தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கினது - ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் - ஆதியாகமம் 1:1
பின்பு நாம் வாழ்கிற இந்த பூமி சுற்றுவதற்கான வானத்தை பால்வெளி மண்டலத்திற்குள், அது தனது இரண்டாவது சுற்றை மேற்கொள்ளும் போது உண்டாக்கினார் - 6.பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7.தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8.தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:6-8
இரண்டு விதமான பூமிகள்: பம்பரத்தைப் போல சுற்றி கொண்டிருக்கும் பால்வெளி மண்டலத்தையும், அதற்குள் சுற்றி கொண்டிருக்கும் நாம் வசிக்கும் பூமியையும், வேதாகமம் ஒரே விதமாக பூமி என்றே அழைக்கிறது, இப்படி இரண்டு விதமான பூமி படைக்கப்பட்டதை நாம் வேதாகமத்தில் தெளிவாக பார்க்க முடியும், இதில் முதலாவது தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கினது பால்வெளி மண்டலத்தை குறிக்கிறது - ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் - ஆதியாகமம் 1:1
அதன் பின்பு, இந்த சுற்றுகிற பால்வெளி மண்டலத்திற்குள், அது தனது மூன்றாவது சுற்றை மேற்கொள்ளும் போது தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கினது நாம் வசிக்கிற பூமியை குறிக்கிறது - 9.பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10.தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார் - ஆதியாகமம் 1:9-10
இப்படி வெளிச்சமானது முதல் நாளின் படைப்பாக இருக்குமானால், நாட்கள் உருவாகுமுன்னே, அதாவது ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதின் அர்த்தம் என்ன?
அது நிச்சியமாகவே தேவன் பால்வெளி மண்டலத்தை படைத்ததையே குறிக்கிறது, எப்படியென்றால் நாட்கள் உருவாகும் முன்பு, அதாவது ஆதியிலே தேவன் பால்வெளி மண்டலத்தை(வானமும் பூமியும்) படைத்தார் என்றும் - ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் - ஆதியாகமம் 1:1
அதன் பின்பு தேவன் வெளிச்சத்தை படைத்த பொழுது, பால்வெளி மண்டலமும் தன் சுற்றை ஆரம்பித்தது, இப்படி பால்வெளி மண்டலம் சுற்ற ஆரம்பித்த பின்பு, தேவன் படைத்த பூமி உட்பட மற்ற கோள்களை "பூமியும் வானமும்" என்றே வேதாகமம் அழைக்கிறது - தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே - ஆதியாகமம் 2:4
இந்த இரண்டு வசனங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், "வானமும் பூமியும்" (பால்வெளி மண்டலம்) படைக்கப்பட்டது ஆதியிலே என்பதையும், ஆனால் பூமியும் வானமும்" (நாம் வாழ்கிற பூமி) படைக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட நாளிலே என்பதையும் அறிந்துக் கொள்ளலாம், அது மாத்திரம் இல்லாமல், மூல பாஷையான எபிரேய மொழியில் பூமி உட்பட எல்லா கோள்களையும் பால்வெளி மண்டலத்தின் பிள்ளைகள் என்றே வேதாகமம் சொல்லுகிறது, அதாவது பூமி உட்பட அனைத்து கோள்களும், சூரியன், சந்திரன் எல்லாவுமே சுற்றுகிற பால்வெளி மண்டலத்திலிருந்து உண்டானவைகள் - These are the generations of the heavens and the earth(Galaxy) when they were created, in the day that the Lord God made the earth and the heavens(Planetary bodies) - Genesis 2:4
இரண்டு விதமான சமுத்திரங்கள்: ஆதியிலே தேவன் உண்டாக்கினது பால்வெளி மண்டலம் என்று பார்த்தோம், அது தனது இரண்டாவது சுற்றை மேற்கொள்ளும் பொழுது எப்படி ஜாலமாக மாறினது? அதற்கு காரணம் பால்வெளி மண்டலத்தின் முதற்சுற்றில் உண்டாக்கப்பட்ட வெளிச்சமே (Galactic Center or Black hole), இதிலிருந்து உண்டான வெப்பத்தினால் முழு பால்வெளி மண்டலமும் ஒரு ஜலத்தை போல் தான் இருந்தது - 6.பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7.தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று - ஆதியாகமம் 1:6-7
அதன் பின்பு, பால்வெளி மண்டலமானது தனது மூன்றாவது சுற்றை மேற்கொள்ளும் போது, நாம் வாழ்கிற பூமியையும், அது மிதமான வெப்பநிலையை அடைந்த பொழுது சமுத்திரத்தையும் தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கினார் - 9.பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10.தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார் - ஆதியாகமம் 1:9-10
இரண்டு விதமான சுடர்கள்: சமீபகாலத்தில் தான் விங்ஞானிகளால் பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதியில் வெளிச்சம் தரும் சுடர்(Galactic Center or Black hole) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதுவரை சூரியன் மட்டுமே வெளிச்சம் தரும் சுடராக கருதப்பட்டது, ஆனால் படைத்த தேவனோ, சூரியனை படைக்கும் முன்பே தான் வெளிச்சத்தை (Galactic Center or Black hole) படைத்ததை வேதாகமத்தில் குறிப்பிட்டிருந்தார் - 3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4.வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5.தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:3-5
ஒரு மலர்கின்ற பூவை போல விரிவடையும் பால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்து, நாம் வாழ்கிற பூமியானது விலகிச் செல்லும் பொழுது, அது தனது மிதமான வெப்பத்தை தக்கவைத்து கொள்வதற்காக நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கினது தான் சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்களாய் இருக்கிறது - 14.பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16.தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18.பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19.சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
அது மாத்திரம் இல்லாமல், பால்வெளி மண்டலத்தின் மூன்றாவது சுற்றில் படைக்கப்பட்ட, நாம் வாழ்கிற பூமியானது, முதலில் பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதியில் (Galactic Center or Black hole) இருந்து உண்டான வெளிச்சத்தினால் தான் மரம் செடி கொடிகளை வளர செய்தது என்பது விங்ஞானிகளே ஆச்சரியப்படும் உண்மையாக இருக்கிறது.
இரண்டு விதமான நாட்கள்: நாம் வாழ்கிற பூமி பம்பரத்தைப் போல சுற்றுவதினால் பகல் இரவு என 24 மணி நேரமுள்ள நாள் உருவாவது போல, இந்த பால்வெளி மண்டலமும் சுற்றுவதினால் சாயங்காலம் விடியற்காலம் என்கிற இரண்டு விதமான வெளிச்சத்தோடு 240 மில்லியன் ஆண்டுகள் நேரமுள்ள நாள் உண்டாகுகிறது, இந்த சாயங்காலம் மற்றும் விடியற்காலத்தின் நீளம் ஏறக்குறைய 120 மில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது, இந்த சாயங்காலம் மற்றும் விடியற்காலத்தின் நேர அளவு, அதின் கதிர் வீச்சு தன்மையின் வித்தியாசம் போன்றவைகள், இன்னும் விங்ஞானிகள் கண்டு பிடிக்காத ஒரு காரியமாக தான் இருக்கிறது.
இப்படி இரண்டு விதமான சுடர்கள் இருந்தாலும், சூரியனே நமக்கு நாட்களையும் வருஷங்களையும் நிர்ணயிப்பதாக இருக்கிறது - பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார் - ஆதியாகமம் 1:14
இப்பொழுது ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு நாளும் பால்வெளி மண்டலம் சுற்றவதை அடிப்படையாக கொண்டது என்கிற புதிய விளக்கத்தோடு படிப்போம், அது பூமியானது பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானது என்கிற கதிரியக்கக் காலமதிப்பீட்டு(radiometric/radioactive dating) முறைக்கும், இந்த பூமியில் தாவரங்களும், விலங்குகளும் பல கோடி ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று சாட்சி பகரும் புதைபடிவங்களும்(Fossil) ஒத்திருப்பதை காணமுடியும்
ஆதியிலே (1440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக): ஆதியிலே தேவன் வானத்தையும்(Empty space) பால்வெளி மண்டலத்தையும் உண்டாக்கினார், இப்படி தேவனாகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கிய எண்ணற்ற பால்வெளி மண்டலங்கள் ஜலம் போலத் தான் இருந்தன - 1.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2.பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் - ஆதியாகமம் 1:1-2
இந்த பால்வெளி மண்டலமானது கடந்த 1440 மில்லியன் ஆண்டுகளாக (6 X 240 million years) இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பார்த்தோம்.
அப்படியேன்றால் இது 1440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக(ஆதியிலே) படைக்கப்பட்டது என்பதை அறிந்துக் கொள்ளலாம், இந்த பால்வெளி மண்டலமானது தனது சுற்றை ஆரம்பிக்கும் வரைக்கும்(ஒளியை உமிழும் வரை) அதை நம் வெறும் கண்களால் காண இயலாது, அதனால் இதை காண இயலாத காரியம்(unseen matter) என்றே அழைக்கிறார்கள்.
முதலாம் நாள்(பால்வெளி மண்டலத்தின் முதல் சுற்று, 1.44 - 1.2 Billion Years) 3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4.வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5.தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:3-5
இந்த பால்வெளி மண்டலத்தின் மையமானது(Galactic Center or Black hole) வெளிச்சத்தை கொடுக்கிறது மாத்திரம் அன்றி, அது பால்வெளி மண்டலத்தை ஒரு பம்பரம் போல சுற்றவும் செய்கிறது, இது ஒரு சுற்று சுற்றி முடிக்க 240 மில்லியன் ஆண்டுகள் தேவைப்படுகிறது, அதின் அதிகமான வெப்பத்தினால் முழு பால்வெளி மண்டலமும் உருகி ஜலம் போல மாறியிருந்தது - அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று - சங்கீதம் 46:6b
இரண்டாம் நாள்(பால்வெளி மண்டலத்தின் இரண்டாவது சுற்று, 1200 - 960 Million Years) 6.பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7.தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8.தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:6-8
இப்படி உருகி ஜலம் போலிருந்த பால்வெளி மண்டலத்திற்குள், தேவன் ஆகாயவிரிவை(Empty space) உண்டாக்கினார், இந்த ஆகாயவிரிவுக்குள் தான் நாம் வசிக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கிறது.
மூன்றாம் நாள்(பால்வெளி மண்டலத்தின் மூன்றாவது சுற்று, 960 - 720 Million Years) 9.பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10.தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார் - ஆதியாகமம் 1:9-10
பால்வெளி மண்டலத்தின் மையமும் அதனை சேர்ந்ததும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலம் என்று அழைக்கப்படுகிறது, அதின் வெப்பம் மிக மிக அதிகம் (20,000–1.8 Million°F), ஆனால் தேவன் படைத்த ஆகாயவிரிவினால்தூரம் சென்ற ஜலம், அதாவது வானத்தின் கீழே இருக்கிற ஜலம் குளிர ஆரம்பித்த பொழுது, அதிலிருந்து நாம் வசிக்கும் பூமியானது உண்டாக்கப்பட்டது - ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே - யோபு 38:30
இப்படி படைக்கப்பட்ட பூமிக்கு தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் பால்வெளி மண்டலத்தின் மையமே (Galactic Center or Black hole) கொடுத்தது, அதனால் தேவனாகிய இயேசு கிறிஸ்து தாவரங்களை படைக்கும் பொழுது அவைகளுக்கு சூரியன் சந்திரன் தேவைப் படவேயில்லை - 11.அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 12.பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13.சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:11-13
ஆனால் கர்த்தர் இந்த தாவரங்களை நமக்காக நிலக்கரிகளாக சேர்த்து வைத்தார், அதனால் தான் நிலக்கரிகளின் வயது 400 million ஆண்டுகளுக்கு மேலானதாக இருக்கிறது
நாலாம் நாள்(பால்வெளி மண்டலத்தின் நான்காவது சுற்று, 720 - 480 Million Years) ஆனால் பால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்து விலகி சென்று கொண்டிருந்த பூமி தனக்கு தேவையான வெப்பத்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பொழுது தான், நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உண்டாக்கினார் - 14.பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16.தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18.பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19.சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
ஐந்தாம் நாள்(பால்வெளி மண்டலத்தின் ஐந்தாவது சுற்று, 480 - 240 Million Years) 20.பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். 21.தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 22.தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். 23.சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:20-23
இப்படி நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உண்டாக்கின பின்பு, பால்வெளி மண்டலமானது தனது ஐந்தாவது சுற்றை மேற்கொள்ளும் பொழுது தான் மச்சங்களையும், பறவைகளையும் படைத்தார்.
இதில் முதலாவது படைக்கப்பட்டது நீந்தும் ஜீவஜந்துக்களே, அதனால் தான் இது வரை கண்டு பிடிக்கப்பட்டவைகளில் நீரில் வாழ்பவைகளின் புதைபடிவங்களே(Fossil) மிகவும் பழமையானதாக இருக்கின்றது, அதற்கு அடுத்ததாக பறவைகளின் புதைபடிவங்கள் இருக்கின்றன
ஆறாம் நாள்(பால்வெளி மண்டலத்தின் ஆறாவது சுற்று, 240 - 0 Million Years) 24.பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 25.தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார் - ஆதியாகமம் 1:24-25
இது வரை கண்டு பிடிக்கப்பட்ட மிருகங்களின் புதைபடிவங்கல்(Fossil) எல்லாமே 240 Million ஆண்டுகளுக்கு பின்பு வாழ்ந்ததாகவே இருக்கிறது(இந்த காலக்கட்டத்தை விங்ஞானம் Dinosaurs or Mesozoic Era என்று அழைக்கிறது), இதனிலும் பழமையானது புதைபடிவங்கள் எல்லாம் நீரில் வாழ்ந்தவைகளின் புதைபடிவங்களாக இருக்கின்றன.
இப்படி எல்லாவற்றையும் நேர்த்தியாக படைத்த நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து, பால்வெளி மண்டலத்தின் ஆறாவது சுற்றின் இறுதியில் தனது சாயலாக மனிதனை படைத்தார் - 26.பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 27.தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 28.பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். 29.பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; 30.பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. 31.அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:26-31
ஏழாம் நாள் - இப்பொழுது பால்வெளி மண்டலத்திம் தனது ஏழாவது சுற்றை சுற்றிக் கொண்டிருக்கிறது, அதனால் தான் ஏழாம் நாள் ஆயிற்று(முடிந்தது) என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை - 1.இவ்விதமாக வானமும் பூமியும்(பால்வெளி மண்டலம்), அவைகளின் சர்வசேனையும்(நாம் வசிக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்) உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. 2.தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் - ஆதியாகமம் 2:1-2
முடிவுரை - ஆதியாகமம் முதலாம் அதிகாரமானது, நாம் வசிக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உட்பட முழு பால்வெளி மண்டலத்திற்க்கும் DNA புஸ்தகமாக இருக்கிறது, இதில் சொல்லப்பட்டுள்ள காரியங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, விங்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் சரி, மனிதகுலத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே சமயத்தில் இந்த ஆதியாகமம் முதலாம் அதிகாரமானது ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்பாக ஏழுதப்பட்டது, அதனால் தற்பொழுது நாம் உபயோகப்படுத்தும் விங்ஞானப் பெயர்களை(Galaxy, Galactic Center, Blackhole, Gravity etc) நம் நினைவில் இருந்து எடுத்துவிட்டு தான் படிக்க வேண்டும்.
யாருக்கும் தெரியாது பால்வெளி மண்டலம் இதுவரை எத்தனை சுற்றை சுற்றி முடித்துள்ளது என்று? யாருக்கும் தெரியாது பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதியும், சூரியனை போல தாவரங்கள் வளரக்கூடிய விதமான கதிர்வீச்சை வீசக்கூடியது என்று? யாருக்கும் தெரியாது பூமியிலுள்ள தாவரங்கள் சூரியன் படைக்கப்படும் காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன என்று? யாருக்கும் தெரியாது பூமியிலுள்ள தாவரங்கள் ஒருகாலகட்டத்தில் பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து உண்டாகும் வெளிச்சத்தினால் வாழ்ந்தன என்று? யாருக்கும் தெரியாது பால்வெளி மண்டலமானது சாயங்காலம் மற்றும் விடியற்காலம் போல என இரண்டு விதமான வெளிச்சத்தை உண்டாக்கக்கூடியது என்று? இவை எல்லாவற்றிக்கும் வேதாகமத்தில் மாத்திரமே பதிலுண்டு, இதனையெல்லாம் உண்டாக்கிய இயேசு கிறிஸ்துவுக்கு ஞானம் (விங்ஞானம்) என்கிற பெயரும் உண்டு, ஆனால் இதனையெல்லாம் பற்றி ஒன்றும் பெரிதாய் சொல்லாதே தேவன், ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்பினார், அது அவர் உங்களை நேசிக்கிறார் என்கிற காரியத்தை தான், அதனால் தான் நம்மை மீட்க தன் ஜீவனையே கொடுத்தார், அது தான் சிலுவையின் அன்பு.