தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள்

யார் தேவன் விலக்கிய புறஜாதியாரை பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்ல முடியும்?அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள் - புலம்பல் 1:10

 

 பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் புறஜாதியாருக்கு கிடைத்த பாக்கியமாகவே இருக்கிறது, அவரது இரத்தம் தான் இன்றும் நமக்காக பரிந்து பேசுகிறதாய் இருக்கிறது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது அதன் அடையாளமாகவே இருக்கிறது - 50.இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது - மத்தேயு 27:50-51