சோதோமின் பாவம்
ஏன் இத்தனை ஆண்டு காலம் இல்லாதஅளவுக்கு LGBT என்று சொல்லப்படக்கூடிய, ஓரின சேர்க்கையாளர்களின்(சோதோமின் பாவத்தின்) உரிமைக்காக போராடும் அமைப்புகள் வெளிப்படையாக செயல்படுகின்றன? இந்த கேள்விக்கு வேதாகமத்தை தவிர வேறு எந்த மதத்தினாலும், எந்த மருத்துவத்தினாலும், எந்த ஞானியினாலும் பதில் சொல்ல முடியாது, ஓரின சேர்க்கை என்கிற இழிவான இச்சைக்கான காரணம் என்ன என்று வேதாகமம் இப்படி சொல்லுகிறது.
இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்கிற சத்தியத்தை தன்னுடைய குலம், கோத்திரம், சாதி, மதம் போன்ற காரியங்களினால் அடக்கிவைப்பதினால்
இயேசு கிறிஸ்து தான் தேவன் என்று அறிந்தும் அவருக்குரிய மகிமையை செலுத்தாதினால்
தங்களை ஞானிகளென்று சொல்லிக் கொள்வதினாள்
அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிந்து போகிற ரூபங்களுக்கு ஒப்பாக்கினதினாள்
18.சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 19.தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20.எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. 21.அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22.அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23.அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24.இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25.தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 26.இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27.அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28.தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார் - ரோமர் 1:18-28
தாங்கள் சோதோமியர் என்று அறியாத புறமதத்தார்
இந்த வசனத்தின் படி விக்கிரக ஆராதனைகாரர்களும், புறமதத்தார் எல்லோரும் ஓரின சேர்க்கையாளர்களாக (சோதோமின் பாவத்தாராக) தானே இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களிடம் ஓரின சேர்க்கை போன்ற இழிவான இச்சைகள் இல்லையே என்று வாதிடலாம், பாபிலோன் தேசமும் அப்படி தான் இருந்தது ஆனால் முடிவு பரிதாபம் தான் - ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும் - ஏசாயா 13:19
தாங்கள் சோதோமியர் என்று அறியாத வேசிமார்க்கத்தார்
எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள் - எரேமியா 23:14
இதில் பரிதாபமான காரியம் என்னவென்றால் வேசித்தனம் பண்ணுகிற அநேகர் தாங்கள் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை அறியாமல் இருப்பது தான், எப்படியேனில் திருமணமான கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது - 22.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். 23.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 24.இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் - ஆதியாகமம் 2:22-24
அதனால் ஒரு திருமணமான பெண்ணோடு வேசித்தனம் பண்ணுகிறவன், அவள் கணவனோடும் வேசித்தனம் பண்ணினவனாக இருக்கிறான் - உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம் - லேவியராகமம் 18:16
தாங்கள் சோதோமியர் என்று அறியாத அநேகர்
நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கின்ற பல காரியங்கள் சோதோமின் பாவங்களாக தான் இருக்கிறது - 49.இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. 50.அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன் - எசேக்கியேல் 16:49-50
சோதோமின் பாவம் என்கிற இழிவான இச்சையில் இருந்து விடுபட
இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவமாக ஏற்று கொண்டு, அவரை அறிக்கை செய்வது
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அனுதினமும் நம்மை கழுவி பரிசுத்தப்படுத்திக் கொள்வது
நம்மை ஞானிகளென்று எண்ணிக்கொள்ளாமல்(தற்பெருமை) இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகவே வாழ்வது
எல்லா விக்கிரக காரியங்களையும் (பதவி, பணம், பொருள்) ஒழித்துவிட்டு, இயேசு கிறிஸ்துவை முற்றிலுமாக சார்ந்து கொள்வது
அதனால் தான் ஏசையா தீர்க்கதரிசி தன் முதல் அதிகாரத்திலேயே சோதோமின் அதிபதிகளே என்று அழைத்து, நாம் மனந்திரும்ப வேண்டியதின் அவசியத்தை சொல்லுகிறார் - 10.சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். 11.உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. 12.நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? 13.இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். 14.உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். 15.நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. 16.உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; 17.நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18.வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19.நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் - ஏசாயா 1:10-19
சபை அங்கீகரிக்க கூடாத காரியம்
அப்போஸ்தலனாகிய யோவான், வேண்டுதல் செய்யப்பட கூடாத பாவம் என்று சொல்லியிருக்கிறாறே, அது என்னவாய் இருக்கும்? - மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன் - I யோவான் 5:16
இதை அப்போஸ்தலனாகிய யோவான், தனது வெளிப்படுத்தின புஸ்தகத்தில் விளக்கியிருந்தார், எப்படியெனில் தேவனை தூக்கப்படுத்துகிற எல்லா காரியங்களையும் குறிப்பிட்டு, அதிலிருந்து சபையானது விடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்ட யோவான், சபையானது அங்கீகரிக்க கூடாத காரியமாகிய சோதோமின் பாவத்தை குறித்து பேசவே இல்லை - ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட காரியங்கள்(எபேசு சபை - வெளி 2:4), ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரத்திரமாய் இருக்கிற காரியங்கள்(சிமிர்னா சபை - வெளி 2:9), பிலேயாமின் வேசித்தனம், மற்றும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கிற காரியங்கள், நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிற காரியங்கள்(பெர்கமு சபை - வெளி 2:14-15), யேசபேலின் வேசித்தனம், மற்றும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கிற காரியங்கள்(தியத்தீரா சபை - வெளி 1:20), உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாய் இருக்கிற காரியங்கள், தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக காணபடாத கிரியைகள்(சர்தை சபை - வெளி 2:1-2), குளிருமின்றி, அனலுமின்றி, வெதுவெதுப்பாய், நிர்ப்பாக்கியமுள்ளவனுமாய், பரிதபிக்கப்படத்தக்கவனுமாய், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாய் இருக்கிற காரியங்கள்(லவோதிக்கேயா சபை - வெளி 2:15-17)