இயேசு கிறிஸ்துவே நம் ராஜா

நமக்காக தேவன் தெரிந்துக்கொண்ட ராஜா எப்படிபட்டவர் என்பதை தேவன் மோசேயின் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார், அது வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறிப்பதாய் இருந்தது, அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிக்க இந்த பாவபூமிக்கு வரவேண்டும் என்கிற காரியத்தையும் வெளிப்படுத்துவதாய் இருந்தது - 14.உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; 15.உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. 16.அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. 17.அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம். 18.அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், 19.இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, 20.அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள் - உபாகமம் 17:14-20 


ஆனால் இதை அறிந்துக்கொள்ளாமல் மனிதர்களை தங்களுக்கு ராஜாவாக ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரவேல் மக்கள் கேட்ட பொழுது தான், கர்த்தர் தன் ஆட்சேபனையை சாமுவேல் மூலமாக தெரிவித்தார் - 4.அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து: 5.இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 6.எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 7.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். 8.நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். 9.இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். 10.அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: 11.உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான். 12.ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். 13.உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 14.உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். 15.உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16.உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். 17. உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். 18.நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான் - I சாமுவேல் 8:4-18


இப்படி இஸ்ரவேல் மக்கள் தங்களை மனிதர்கள் ராஜாவாக ஆள வேண்டும் என்று கேட்டது, கர்த்தரின் பார்வைக்கு ஆகாததாய் காணப்பட்டதினால்,  இடி முழக்கம் மழையை அனுப்பி தன் ஆட்சேபனையை வெளிப்படையாகவும் தெரிவித்தார் - 12.அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். 13.இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 14.நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். 15.நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். 16.இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். 17.இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, 18.சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; 19.சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள். 20.அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள். 21.விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே - I சாமுவேல் 12:12-21


முதலாவது நம்முடைய ராஜா எப்படிபட்டவராக இருக்க வேண்டும் என்பதை தேவன் மோசேயின் மூலமாக உபாகமம் புஸ்தகத்தில் சொன்ன காரியங்களை பார்ப்போம், இதில் முதலாவது காரியம் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய் என்பதாகும், பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி தேவனால் தெரிந்து கொள்ப்பட்டு அவரால் ராஜா என்று அழைக்கப்பட்டவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே  - 6.நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். 7.தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் - சங்கீதம் 2:6-7  


அது மாத்திரம் இல்லாமல் உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய் என்று சொல்லும் பொழுது, தேவன் மனுஷ குமாரனாய் பிறக்க வேண்டும் என்பதையும், அதிலும் இஸ்ரவேல் கோத்திரத்தில் ஒருவராய் பிறக்க வேண்டும் என்பதையும் தீர்க்கதரிசனமாய் சொல்லியிருக்கிறார், அதே சமயத்தில் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலுள்ள எல்லோருக்கும் சகோதரராகவும் இருக்கிறார் - 11.எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: 12.உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; 13.நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார் - எபிரெயர் 2:11-13 & தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் - ரோமர் 8:29 


அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும் என்கிற கட்டளையின் மூலம், தேவன் நமக்காக தெரிந்துக்கொண்ட ராஜா முற்றிலும் மாறுபட்டவர், அது பிரபலமான ராஜாவாகிய சாலொமோனாக கூட இருக்க வாய்ப்பு இல்லை என்பதை நாம் அறிந்துக் கொள்வதற்காக தான், சாலொமோன் முதல் பல ராஜாக்களை குறித்த சில காரியங்களை வேதாகமத்தில் பார்க்கலாம் - 23.பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். 23.சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள். 23.வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். 26.சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான். 27.எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். 28.சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள் - I இராஜாக்கள் 10:23-28

ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் என்று சொல்லும் பொழுது, நம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து முற்றிலும் மீட்பவராக நம் கர்த்தர் இருக்கப் போகிறார் என்கிற சந்தோஷமான செய்தியை கொண்டதாகவே இருக்கிறது - 34.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35.அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். 36.ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் - யோவான் 8:34-36


அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம் என்கிற கட்டளை, தேவன் தெரிந்துக்கொண்ட ராஜா, பிரபலமான ராஜாவாகிய தாவீதாகவோ கூட இருக்க வாய்ப்பு இல்லை என்பதை நாம் அறிந்துக் கொள்வதற்க்காக தான், அவர்களை குறித்த சில காரியங்களை வேதாகமத்தில் பார்க்கலாம் - 12.கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது, 13.அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள் - II சாமுவேல் 5:12-13


வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம் என்கிற கட்டளை, அது பிரபலமான ராஜாவாகிய சாலொமோனாகவோ அல்லது எசேக்கியாகவோ இருக்க வாய்ப்பு இல்லை என்பதை நாம் அறிந்துக் கொள்வதற்க்காக தான், அவர்களை குறித்த சில காரியங்களை வேதாகமத்தில் பார்க்கலாம் - 27.எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும், 28.தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான். 29.அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார் - II நாளாகமம் 32:27-29       


இப்படி தேவன் மோசேயின் மூலமாக சொன்ன ராஜா தேவனுடைய குமாரனெயனற்றி வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதை அறியாமல்,  இஸ்ரவேல் மக்கள் ஒரு மனிதனை தங்களுக்கு ராஜாவாக கேட்ட பொழுது, தேவன் தெரிவித்த ஆட்சேபனையில் இருந்தும் பல காரியங்களை அறிந்துக் கொள்ளலாம், அவைகளை இப்பொழுதுப் பார்க்கலாம். இதில் முதலாவது நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவன் நம்மோடு இருக்கும் பொழுது, ஒரு மனிதனை ராஜாவாக நம் இருதயத்தில் வைத்துக்கொள்வது, தேவனுடைய பார்வையில் அந்நிய தேவர்களை சேவிப்பதற்கு ஒத்த காரியமாகவே இருக்கிறது - 6.எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 7.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். 8.நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள் - I சாமுவேல் 8:6-8

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார் என்று வேதகாமம் சொல்லுகிறது , ஆனால் இந்த பூமியின் ராஜாக்கள் பின்பு நாம் செல்லும் பொழுது அவர்கள் நம்மை துக்கப்படுத்துகிறவர்களாகவே இருப்பார்கள் - 11b.உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான். 12.ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். 13.உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான் - I சாமுவேல் 8:13

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை மென்மேலும் ஆசிர்வதிக்கிறவராகவும், அந்த ஆசிர்வாதத்திலிருந்து நம்மை கொடுக்கிறவர்களாகவும் மாற்றுகிறார், ஆனால் இந்த பூமியின் ராஜாக்களோ நம்முடையதை திருடுகிறவர்களாகவே இருப்பார்கள் - 14.உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். 15.உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16.உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். 17. உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள் - I சாமுவேல் 8:4-18


அது மாத்திரம் இல்லாமல், இந்த பூமியின் ராஜாக்களை நம்பி எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது கடைசியில் துக்கம் அளிப்பதாகவே இருக்கிறது, ஆனால் இயேசு கிறிஸ்துவை ராஜாவாக ஏற்றுக் கொண்டவர்கள் ஒருவர் கூட நஷ்டம் அடைந்ததே இல்லை - நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான் - I சாமுவேல் 8:18

சேனைகளின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நம் ராஜா

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், விக்கிரகம் மற்றும் பிசாசுகளின் வணக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அதே சமயத்தில் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சகல அதிகாரமுள்ள ராஜகவும் இருக்கிறார், அப்படியென்றால் பூமியின் ராஜாக்களின் மேல் வைக்கிற சிந்தையில் இருந்தும் நாம் விடுவிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால் பூமியின் ராஜாக்களின் மேல் வைக்கிற சிந்தையை முற்றிலும் ஒழித்து விட்டு கர்த்தரையே ராஜா என்று சொல்லுவோம், அவரையே நோக்கிப் பார்ப்போம் - பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள். அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை - சகரியா 14:16-17