நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு
இஸ்ரவேல் தேசத்தில், எருசலேம் தேவாலயத்தின் அருகில் சீலோவாம் என்று ஒரு குளம் இருந்தது, சமீபத்தில் தோல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்து அது இருந்த இடத்தையும் உறுதி செய்து இருக்கிறார்கள், அது ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில், எசேக்கியா ராஜாவினால் கட்டப்பட்டது.
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது - II இராஜாக்கள் 20:20
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது - II நாளாகமம் 32:30
இந்த எசேக்கியா ராஜாவின் காலத்தில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி, பிதாவாகிய தேவன் நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்துவை அனுப்பினார் என்று உரைத்த தீர்க்கதரிசனத்தில், அனுப்பினார் என்பதின் எபிரேய வார்த்தை ஷ-லோ (שָׁלַח => shâ-lach) என்பதாகும் - 1.கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், 2.கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், 3.சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார் (שָׁלַח => shâ-lach => ஷ-லோ) ; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள் - ஏசாயா 61:1-3
இந்த ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை தான் இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தின் துவக்கத்தில் தேவாலயத்தில் படித்து, தாம் தான் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டவர் என்பதை வலியுறுத்தினார் - 16.தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். 17.அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: 18.கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19.கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்(שָׁלַח => shâ-lach => ஷ-லோ), என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, 20.வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. 21.அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார் - லூக்கா 4:16-21
பின்பு ஒருமுறை, ஒரு பிறவிக்குருடன் சீலோவாம் குளத்தில் தன் கண்களை கழுவி பார்வையடைந்த பொழுது, அந்த அற்புதம் தேவனால் அனுப்பப்பட்டவர் (இயேசு கிறிஸ்து) இந்த பூமிக்கு வந்ததை அறிவிப்பதாகவே இருந்தது - 1.அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். 2.அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3.இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். 4.பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. 5.நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். 6.இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7.நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். 8.அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். 9.சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான் - John 9:1-9
இவ்வாறு இயேசு கிறிஸ்து தாம் உலகத்திற்க்கு அனுப்பப்பட்ட சீலோவாம் என்றும், அவர் செய்யும் அற்புதங்களை கொண்டு அவரை நாம் கண்டுபிடிக்க முடியும் என்பதை, சங்கீதகாரன் இவ்வாராக எழுதி வைத்துள்ளார் - குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார் - சங்கீதம் 146:8
சமாதான கர்த்தர்
ஆதியாகமம் புஸ்தகத்தில் இந்த ஷிலோ என்கிற பெயர் வரப்போகிற மெசியாவை குறிப்பதாக இருக்கிறது - 9.யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? 10.சமாதான கர்த்தர்(Shiloh) வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள் - ஆதியாகமம் 49:9-10
Judah is a lion's whelp: from the prey, my son, thou art gone up: he stooped down, he couched as a lion, and as an old lion; who shall rouse him up? The sceptre shall not depart from Judah, nor a lawgiver from between his feet, until Shiloh come; and unto him shall the gathering of the people be - Genesis 49:9-10
நீங்கள் மனந்திரும்பாமற்போனால்
அதே சமயத்தில், இந்த சீலோவாம் குளம் மனந்திருந்தாதவர்களுக்கு ஏச்சரிப்பின் குளமாகவும் இருக்கிறது - 4.சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 5.அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்- லூக்கா 13:4-5