உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல இயேசுவினிடத்தில் அன்புகூருவாயாக

மோசே கொடுத்த முழு நியாயப்பிரமாணத்தையும் இயேசு கிறிஸ்து இரண்டு கற்பனைகளில் அடக்கி சொன்னதைத் தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 35.அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36.போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். 37.இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38.இது முதலாம் பிரதான கற்பனை. 39.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40.இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் - மத்தேயு 22:35-40

இப்படி இயேசு கிறிஸ்து முழு நியாயப்பிரமாணத்தையும் இரண்டு கற்பனைகளில் அடக்கி சொன்ன வசனங்கள், நியாயப்பிரமாண புஸ்தகத்தில் இரண்டு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

முதலாம் பிரதான கற்பனை - 4.இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 5.நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக - உபாகமம் 6:4-5

இரண்டாம் பிரதான கற்பனை - 18b.உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர் - லேவியராகமம் 19:18b


இப்படி முழு நியாயப்பிரமாணத்தையும் இரண்டு கற்பனைகளில் அடக்கி சொல்வது, வேதபாரகர் மத்தியில் பிரபலமான உபதேசமாக இருந்தது, அதனால் தான் ஒரு வேதபாரகன் இயேசுவிடமே இந்த கேள்வியை கேட்டான் - 28.வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். 29.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30.உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். 32.அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33.முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். 34.அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை - மாற்கு 12:28-34 


இதில் "பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற இரண்டாம் கற்பனையானது "தேவனிடத்தில் அன்புகூருவாயாக" என்கிற முதலாம் கற்பனைக்கு  ஒப்பாயிருக்கிறது என்று சொல்லும் பொழுது, இரண்டாம் கற்பனையானது முதலாம் கற்பனைக்கு மாற்றாக இருக்கிறது என்று அர்த்தம், இல்லாவிட்டால் இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே என்று தான் இயேசு கிறிஸ்து போதித்திருப்பார் - மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே - மத்தேயு 23:23

நாம் அன்புகூர வேண்டிய அந்த பிறன் யார்?

எப்படி இரண்டாம் கற்பனையானது முதலாம் கற்பனைக்கு மாற்றாக இருக்க முடியும், இதை நாம் அறிந்துக் கொள்ள தான் இந்த காரியங்கள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, அதாவது ஒரு முறை நியாயசாஸ்திரி ஒருவன் கர்த்தரிடமே இந்த கேள்வியை கேட்டான், எனக்குப் பிறன் யார்? அதாவது நான் அன்புகூர வேண்டிய அந்த பிறன் யார்? என்று கேட்டான் - 25.அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 26.அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். 27.அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். 28.அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். 29.அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான் - லூக்கா 10:25-29

எனக்குப் பிறன் யார்? என்று அந்த நியாயசாஸ்திரி கேட்ட கேள்வியில் ஒரு பரம இரகசியம் இருந்ததினால் தான் கர்த்தர் ஒரு உவமையின் மூலமாக பதில் சொன்னதைப் பார்க்கிறோம், ஒருவேளை நாம் எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்பது பதிலாக இருக்குமேயானால் கர்த்தர் ஒரு உவமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை - 30.இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31.அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 32.அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 33.பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 34.கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35.மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 36.இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 37.அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார் - லூக்கா 10:30-37

இந்த உவமையை ஆராய்வதற்கு முன்பு, கேள்வியை இன்னொரு முறை நியாபகம் படுத்திக் கொள்வோம், கேள்வி என்னவென்றால் "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்ற கட்டளையில் சொல்லப்பட்ட பிறன் யார் என்பதே, இதை விளக்க கர்த்தர் சொன்ன நல்ல சமாரியன் உவமையில் பின்வரும் 6 பாத்திரங்கள் உள்ளன.


1. எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போன மனுஷன்(கள்ளர் கையில் அகப்பட்டவன்)
2. கள்ளர் 

3. ஆசாரியன் 

4. லேவியன்

5. சமாரியன் 

6. சத்திரத்தான் 


இதில் நாம் அன்புகூர வேண்டிய அந்த பிறன் யார் என்றால்? நிச்சியமாகவே அது நமது காயங்களைக் கட்டி அதில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்த சமாரியன் தான்.

அப்பயென்றால் இந்த 6 பாத்திரங்களில் நாம் எந்த பாத்திரமாக இருக்கிறோம்? நிச்சியமாகவே நாம் சமாரியனாக இருக்க முடியாது, காரணம் அந்த சமாரியன் தான் நாம் அன்புகூர வேண்டிய பாத்திரமாக(பிறனாக) இருக்கின்றாரே, அப்படியென்றால் நாம் யார்? நன்றாய் அறிந்துப் பார்த்தாள் நாம் கள்ளர் கையில் அகப்பட்டவனாகத் தான் இருக்கின்றோம், நமது பரிசுத்த வஸ்திரம் சத்ருவினால் திருடப்பட்டு விட்டது, நமது ஆவி ஆத்மா சரீரத்தில் தான் எவ்வளவு காயங்கள், நமது வாழ்நாள் குற்றுயிராய் இருப்பவனை போல்த்தான் இருக்கிறது, நமக்கு ஒரு சமாரியன் தேவை, அவர் தான் இயேசு கிறிஸ்து, நமக்கு பரிசுத்த வஸ்திரம் கொடுக்க, நம்மை குணமாக்க, நமக்கு நித்திய ஜீவனை அளிக்க, தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்து நமக்கு உண்டு, நாம் நேசிக்க வேண்டிய பிறன் அவர் தான், அது தான் பிரதான கற்பனையாகவும் இருக்கிறது.

நமது வாழ்க்கையில் வந்த மற்றவர்கள் எல்லோரும் தற்செயலாய் வருபவர்கள் தான், அது மனிதனாக இருந்தாலும் சரி, உறவினராக இருந்தாலும் சரி,

வேறு எந்த தெய்வமாக  இருந்தாலும் சரி, அவைகளால் ஒரு பலனும் கிடைக்காது - அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு பக்கமாய் விலகிப்போனான், அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான் - லூக்கா 10:31-32


ஆனால் நமது கர்த்தரோ, நமக்காக பரலோகத்தை விட்டு வந்தவராகவும், நம்மை காண்கிற தேவனாகவும், நம்மை கண்டு மனதுருகுகிற தேவனாகவும் இருக்கிறார் - பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் அவனைக் கண்டு மனதுருகி - 10:32


அவர் நிச்சியமாய் திரும்பி வருவார், அதனால் தான் அவர் இப்படிச் சொன்னார் - அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான் - லூக்கா 10:35     

நாம் அன்பு கூற வேண்டிய ஒரே நபர் இயேசு கிறிஸ்து என்றால், பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த விசுவாசிகள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? அவர்களுக்கு இது ஒரு தீர்க்கதரிசனமாக இருந்ததாம், எப்படியெனில் முதலாம் பிரதான கற்பனையில் நாம் அன்பு வேண்டியே தேவன், இரண்டாம் பிரதான கற்பனையில் சொல்லப்பட்ட பிறனாக வரப்போகிறார் என்கிற தீர்க்கதரிசனமாக இருந்ததாம் - 35.அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36.போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். 37.இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38.இது முதலாம் பிரதான கற்பனை. 39.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40.இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் - மத்தேயு 22:35-40