சவுல் ராஜா ஏன் பலிகள் செலுத்த அனுமதிக்கப்பட வில்லை?
வனாந்திரத்தில் மோசேயின் உத்தரவின்படி இஸ்ரவேலில் வாலிபர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறிக்கும் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் பலியிட்டார்கள் என்று பார்க்கிறோம் - 4.மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 5.இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள் - யாத்திராகமம் 24:4-5
வேதாகமத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முதற்கொண்டு, இஸ்ரவேலின் வாலிபர்கள் வரை சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் பலியிட்டிருக்க, சவுல் அந்த பலியை கொடுக்க கூடாது என்று சாமுவேல் சொல்ல காரணம் என்ன? - நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான் - I சாமுவேல் 10:8
அது மாத்திரம் இல்லாமல், சவுல் சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் செலுத்தினதை ஒரு மிருதலாக சாமுவேல் கருத காரணம் என்ன? - 8.அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். 9.அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். 10.அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 11.நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, 12.கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். 13.சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். 14.இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான் - I சாமுவேல் 13:8-14
அது சவுலின் அபிஷேகத்திற்கு அடுத்த காரியமாகவே இருந்தது, இதை எளிதாக புரிந்துக் கொள்ள ஆரோனுக்கு அளிக்கப்பட்ட அபிஷேகத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நன்று, ஆரோனுக்கு அளிக்கப்பட்ட அபிஷேகம், பலி செலுத்துவதற்க்கான அபிஷேகமாக இருந்தது, அதாவது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்பதற்கான அபிஷேகமாய் இருந்தது, இப்படி பலி செலுத்துவதற்கான அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் சந்ததியில் வந்த காய்பா என்ற பிரதான ஆசாரியர் தான் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு ஒப்புகொடுத்து தன் ஊழியத்தை முடித்தார்.
ஆனால் சவுலின் அபிஷேகம், இயேசு கிறிஸ்துவின் மரணம் வரை காத்திருக்க வேண்டிய அபிஷேகமாக இருந்தது, அதனால் தான் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் சவுல் கொடுக்க கூடாது என்று சாமுவேல் சொன்னார், இப்படி இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பிற்பாடு அழைக்கப்பட்டவர் தான் சவுல் ராஜாவின் சந்ததியில் வந்த அப்போஸ்தலனாகிய பவுல் .