கலப்பையின்மேல் தன் கையை வைத்து
பழைய ஏற்பாட்டு காலத்தில், எலிசாவிற்கு ஊழிய அழைப்பு கொடுக்கப்பட்ட பொழுது, வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவர எலிசாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது உண்மை தான் - 19.அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். 20.அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான். 21.அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான் - I இராஜாக்கள் 19:19-21
ஆனால் இங்கு கர்த்தர் ஒருவரை ஊழியத்திக்கு அழைக்கும் பொழுது, வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவர அனுமதி கொடுக்கப்பட வில்லை, இதற்கு முதல் காரணம், கர்த்தரே நமக்கு தாயும் தந்தையுமாய் இருப்பதை நாம் அறிந்து கொள்வதும், இந்த உலக காரியங்களில் இருந்து நம்மை வேறு பிரிப்பதும் தான் - 61.பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். 62.அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் - லூக்கா 9:61-62