சாராளின் விளக்கம்

இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்  


நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7

குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7.


சாராளின் விளக்கம்


மம்ரேயின் சமபூமியிலே கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த தரிசனத்தில், கர்த்தரை அவன் மூன்று நபர்களாக அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவராக தரிசித்தான், இது அப்போஸ்தலனாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை கண்ட பொழுது அவரை மூன்று நபர்களாக தரிசித்ததிற்க்கு ஒப்பாகவே இருந்தது - 1.பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2.தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து; 3.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம் - ஆதி 18:1-3


இப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தரிசித்த ஆபிரகாம், கர்த்தரை அப்பம் புசிக்க வரும்படி வருந்தி கேட்டுக்கொண்டான் - கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள் - ஆதி 18:4-5


அப்பொழுது ஆபிரகாம், கிறிஸ்துவானவர் சாராளின் சந்ததியில் தான் ஜீவ அப்பமாக வரப்போகிறார் என்பதை அறிவுறுத்த தன்னுடைய வீட்டில் ஆகார் மற்றும் எத்தனையோ வேலைகாரிகள் இருந்த பொழுதும் சாராளை அப்பம் சுட சொல்லுகிறார், அது மாத்திரம் இல்லாமல் கிறிஸ்துவானவர் திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக வரப்போகிறார் என்பதினால் மூன்றுபடி மாவை எடுத்து அப்பம் சுட சொல்லுகிறார், ஆனால் வேலைக்காரனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை - அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான் - ஆதி 18:6-7


கடைசியாக சாப்பாடு பரிமாறும் பொழுது தான் ரகசியம் விளங்கினது, எப்படியெனில் சாராள் செய்ய வேண்டிய அப்பம் பரிமாறப்படவில்லை - ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள் - ஆதி 18:8



ஏன் சாராள் சமைக்கவில்லை? காரணம் சாராள் கர்த்தரே ஜீவ அப்பமாக வரவேண்டும் என்று காத்திருந்தாளாம், அப்பொழுது தான் கர்த்தர் தாம் ஜீவ அப்பமாக வரப்போவதை வாக்குதத்தமாக சொன்னார் - 9.அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10.அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் - ஆதி 18:9-10


இப்படி வாக்குதத்தம் பெற்ற சாராளினிடத்தில் பிறந்த ஈசாக்கின் வம்சத்தில் ஜீவ அப்பமாகிய கர்த்தர் வெளிப்பட்டார். பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனின் தற்சுரூபமாய், அதாவது மூன்றுபடி மாவில் சுடப்பட்ட அப்பமாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார் - 48.ஜீவ அப்பம் நானே. 49.உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50.இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. 51.நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார் - யோவான் 6:48-51


இப்படியாக பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்து,  சாராளை குறித்து சொல்லும் பொழுது,  அவள் திரியேக தேவனே (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர்) ஜீவ அப்பமாக வர வேண்டும் என்று காத்திருந்தார்களாம் - 20.மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21.அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார் - லூக்கா 13:20-21


ஈசாக்கு பிறந்த பொழுது கர்த்தர் ஏன் எந்த தரிசனமும் தரவில்லை?

கர்த்தர் சொன்ன இந்த வாக்குத்தத்ததின் படி ஈசாக்கு பிறந்த பொழுது கர்த்தர் வந்திருக்க வேண்டுமே? - 9.அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10.அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் - ஆதி 18:9-10


ஆனால் ஈசாக்கு பிறந்த பொழுது கர்த்தர் வரவில்லையே? எந்த தரிசனமும் தரவில்லையே? - 1.கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். 2.ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 3.அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். 4.தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான் - ஆதியாகமம் 21:1-4


காரணம், "திரும்ப வருவேன்" என்கிற வாக்குத்தத்தம், தெய்வமே இந்த பூமியில் பிறக்க போவதை குறித்ததாய் இருந்ததினால் தான், இதை தான் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதின புஸ்தகத்தில் இவ்வாறு சொல்லுகிறார் - அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே - ரோமர் 9:9