ஆனாலும் ஞானமானது
அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்
அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்
வேதாகமத்தில் இரண்டு இடங்களில் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்று இயேசு கிறிஸ்து குறித்து சொல்லப்பட்டுள்ளது, இதன் பொருள் தான் என்ன? முதலாவது நாம் அந்த வசனங்களைப் பார்ப்போம்.
31.பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32.சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 33.எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். 35.ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் - லூக்கா 7:31-35
16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18.எப்படியெனில், யோவான் போஜனபானம் பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் - மத்தேயு 11:16-19
இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக புரிந்துக் கொள்ளலாம், ஒரு குடும்பத்தில் தாயானவளுக்கு இரண்டு விதமான அடையாளங்கள் உண்டு, கணவனுக்கு மனைவியாகவும், அதே சமயத்தில் பிள்ளைகளுக்குத் தாயாகவும் அவள் இருக்கிறாள், ஒருமுறை தன்னை குறைச் சொன்ன கணவனுக்கு, அவள் இவ்வாறு பதிலளித்தாளாம், நீங்கள் என் மீது பல குறைகளைச் சொல்லலாம், ஆனால் என் பிள்ளைகளுக்கோ என்னை நல்ல அம்மா என்று தான் சொல்வார்கள் என்று பதிலளித்தாளாம்.
அதே போல் தான், இயேசு கிறிஸ்துவும் தன்னை குறை சொல்பவர்களிடம், நீங்கள் என் மீது பல குறைகளைச் சொல்லலாம், ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்று சொல்லி, தான் தான் சாலொமோன் ராஜா சொன்ன ஞானம் என்பதை உறுதிப்படுத்தினார், அதாவது இயேசு கிறிஸ்து தான் இந்த முழு உலகத்தையும் படைத்தவர் என்பதையும், இக்கால அறிவியல் வல்லுனர்கள் அழைக்கும் விங்ஞானமும் அவர் தான் என்பதை அறிவுறுத்தினார் - 22.கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார். 23.பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். 24.ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். 26.மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 26.அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். 27.அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், 28.உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், 29.சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், 30.நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன் - நீதிமொழிகள் 8:22-30
அப்போஸ்தலனாகிய பவுலின் விளக்கம்
அப்போஸ்தலனாகிய பவுல், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே இயேசு கிறிஸ்து ஞானமாயிருப்பதை அறிந்துக் கொள்ளமுடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளார் - 23.நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். 24.ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார் - I கொரிந்தியர் 1:23-24
இயேசு கிறிஸ்துவே சமாதானம்
சாலொமோனின் நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஞானமே சமாதானத்தை தருவதாக பார்க்கிறோம் - அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம் - நீதிமொழிகள் 3:17
இப்படி சமாதானத்தை தரும் ஞானம், இயேசு கிறிஸ்துவே என்பதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக - யோவான் 14:27
இயேசு கிறிஸ்துவே நித்தியஜீவன்
சாலொமோனின் நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஞானமே ஜீவனை தருவதாக பார்க்கிறோம் - அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான் - நீதிமொழிகள் 3:18 & 35.என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். 36.எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது - நீதிமொழிகள் 8:35-36
இப்படி ஜீவனை தரும் ஞானம், இயேசு கிறிஸ்துவே என்பதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார் - யோவான் 3:36 & அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் - யோவான் 14:6 & 12.குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13.உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் - I யோவான் 5:12-13
நீங்கள் கேட்டு உணருங்கள்
சாலொமோனின் நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஞானம் நம்மை கூப்பிடுவதாக பார்க்கிறோம் - ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? - நீதிமொழிகள் 8:1
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவே நம்மை அழைத்தார் - பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள் - மத்தேயு 15:10 & பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள் - மாற்கு 7:14
இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல
சாலொமோனின் நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஞானத்திற்கு நிகரானது ஒன்றும் இல்லை என்று பார்க்கிறோம் - முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல - நீதிமொழிகள் 8:11 & 13.ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். 14.அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. 15.முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல - நீதிமொழிகள் 3:18
அந்த நிகரற்ற நபர் இயேசு கிறிஸ்து என்பதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 18.அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? 19.அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். 20.மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21.அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார் - லூக்கா 13:18-21