இம்மானுவேலே

இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை குறித்து, யோசேப்பினிடம் கர்த்தருடைய தூதன் பேசினது, ஏசையாவின்  தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதாகவே இருந்தது - 18.இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20.அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21.அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22.தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23.அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் - மத்தேயு 1:18-23


இந்த ஏசையா தன் தீர்க்கதரிசனத்தில், இயேசு கிறிஸ்துவை இம்மானுவேல் என்றே குறிப்பிட்டிருந்தார் - ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் - ஏசாயா 7:14


அதே ஏசாயா தனது அடுத்த அதிகாரத்தில், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறித்தும் தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார் - 7.இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, 8.யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும் - ஏசாயா 8:7-8


ஆற்றுநீர் புரண்டது போவது என்பது மரணத்தையே குறிக்கிறது என்பதை புலம்பலின் புஸ்தகத்திலும் பார்க்கலாம் - 52.முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். 53.காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள். 54.தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன் - புலம்பல் 3:52-54

இப்படி நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்து, இம்மானுவேலாக பிறக்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்த ஏசையா, நம்மை மீட்க இயேசு கிறிஸ்து பாடுபட வேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லியிருந்தார்.