பவுலை குறித்து சவுல் ராஜாவிடம் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள்
அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது
கழுதைகளைத் தேட போன சவுல், எப்பிராயீம் மலை, சலீஷா நாடு, சாலீம் நாடு, மற்றும் பென்யமீன் நாடுகளை கடந்து, சூப் நாடு வரை சென்று சாமுவேலை சந்தித்தது, நிச்சையமாகவே சில கால கட்டங்களை கடந்த பிறகு தான், முன்குறிக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் நிறைவேறப்போகிறது என்பதை உணர்த்துகிறது -
1.பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன். 2.அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 3.சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். 4.அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை, பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை. 5.அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான். 6.அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான் - I சாமுவேல் 9:1-6
இவன்தான் என் ஜனத்தை ஆளுவான்
கர்த்தர் சவுலை குறித்து, "இவன்தான் என் ஜனத்தை ஆளுவான்" என்று சொன்னதும், மேலும் சாமுவேல் சவுலை பார்த்து "சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா?" என்று சொன்னதும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிற காரியமே கிடையாது, இந்த வாக்குத்தத்தங்கள் தான் சவுலின் வம்சத்தில் வந்த பவுலை, கிறிஸ்தவத்திற்கு தலைவன் என்று அழைக்கப்படுகிற அளவிற்க்கு உயர்த்தியது - 15.சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க: 16.நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். 17.சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார். 18.சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். 19.சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். 20.மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான் - I சாமுவேல் 9:15-20
கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்
சவுலை கர்த்தருடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணின சாமுவேல், "கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்" என்று சொன்னதின் அர்த்தம் என்ன? 1.அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? 2.நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள் - I சாமுவேல் 10:1-2
இதை ஒரு உதாரணத்தின் மூலமாக எளிதாக புரிந்துக் கொள்ளலாம், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை தரிசித்த மகதலேனா மரியாள், முதலாவது வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்களை கண்டாள், பின்பு திரியேக தேவனாம் இயேசு கிறிஸ்துவை தரிசித்தாள் - 11.மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, 12.இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். 13.அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14.இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். 15.இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17.இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18.மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள் - யோவான் 20:11-18
இதை ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மகதலேனா மரியாளின் முன்னோர்களிடம் ஒருவர் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தால் எப்படி சொல்லியிருப்பார்? காலம் நிறைவேறும் பொழுது "கல்லறைக்குள் இரண்டு மனுஷரைக் காண்பாய்", அதன் பின்பு திரியேக தேவனை காண்பாய் என்று தானே சொல்லியிருப்பார்கள், அதை தான் சாமுவேல் சவுலிடம் சொன்னார், இந்த வாக்குதத்தம் தான் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் கழித்து சபையை துன்புறுத்த தமஸ்குவுக்கு சென்ற சவுலின் வாழ்க்கையில் நடந்தது.
நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது
சவுலின் பிரயாணம் தன் தகப்பனாகிய கீஸின் கழுதைகளைத் தேடுவதாய் தான் இருந்தது, ஆனால் சவுல் சாமுவேலிடம் சென்ற பொழுது, "மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம், அவைகள் அகப்பட்டது" என்று சொன்னதும், "நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது" என்று சொன்னதும், புறஜாதியார் ஆட்டுக்குட்டியானவரால் மீட்கபடும் காரியத்திற்கு அடுத்ததாகவே இருந்தது - 17.சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார். 18.சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். 19.சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். 20.மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான் - I சாமுவேல் 9:17-20
1.அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? 2.நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள் - I சாமுவேல் 10:1-2
இப்படி புறஜாதியார், அதாவது தேவனை விட்டு கேட்ட குமாரனை போல் இருப்பவர்கள், ஆட்டுக்குட்டியால் மீட்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நித்திய மரணமே முடிவு என்று வேதாகமம் சொல்லுகிறது - கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக - யாத்திராகமம் 13:13
என் மகனுக்காக என்னசெய்வேன்
எப்படி மகதலேனா மரியாள், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை தரிசிக்கும் முன்பு இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் (இரண்டு தூதர்களாய்) தரிசித்தாலோ, அது போல் தான் பவுலிடம் ஆவியானவர் இடைப்பட்ட பொழுது சொன்ன "உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான்" என்கிற காரியம், நம் இரட்சிப்பிற்காக கர்த்தர் அடைந்த பாடுகளையும், குமாரனின் சிலுவை பாடுகள் எவ்வளவாய் பிதாவை துக்கப்படுத்தியது என்பதையும் வெளிப்படுத்துகிறது - 1.அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? 2.நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள் - I சாமுவேல் 10:1-2
பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்
மேலும், சவுலிடம் சாமுவேல் "பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்" என்று சொன்னது, திரியேக தேவனாம் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, அதாவது வாரத்தை என்கிற ஆட்டுகுட்டியானவரையும், அவருக்குள் இருந்த போஜனபலியாகிய பிதாவையும், பானபலியாகிய பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கிறது - 3.நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, 4.உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும் - I சாமுவேல் 10:3-4
இந்த மேலான திருத்துவ அனுபவத்தை தான், அப்போஸ்தலனாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானும் பெற்றார்கள் - 1.ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2.அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 3.அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4.அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5.அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 6.சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7.அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். 8.அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை - மத்தேயு 17:1-8
ஏழுநாள் காத்திரு
கடைசியாக, சாமுவேல் சவுலிடம், பலிகள் செலுத்தப்பட்டு, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்று சொன்னது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வரை, சவுல் காத்திருக்க வேண்டும் என்பதேயாகும் - 7.இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். 8.நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான். 9.அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது - I சாமுவேல் 10:3-4
அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது
இறுதியில், சவுலின் வாழ்க்கையில் சாமுவேல் சொன்ன தீர்க்கதரிசனங்களின் அடையாளங்கள் மாத்திரமே நிறைவேறியிருந்தது, அது முழுமை பெற்றதோ சவுலின் சந்ததியில் வந்த பென்யமீனனாகிய அப்போஸ்தலர் பவுலின் வாழ்க்கையில் - 7.இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். 8.நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான். 9.அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது - I சாமுவேல் 10:3-4
இவர்களுக்குத் தகப்பன் யார்?
தேவனுடைய ஆவியானவர் சவுலின் மேலிறங்கின பொது "இவர்களுக்குத் தகப்பன் யார்" என்று எழுப்பப்பட்ட கேள்வி, பரலோகத்தின் தேவனே நமக்கு பிதாவாக இருக்க போகிறார் என்கிற ரகசியத்தை உள்ளடக்கியதாகவும், இது எப்பொழுது நிறைவேறும் என்கிற ஏக்கத்தின் கேள்வியாகவும் இருக்கிறது - 10.அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். 11.அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 12.அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று. 13.அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான் - I சாமுவேல் 10:10-13
இந்த புத்திரசுவிகார உரிமையை தான் கர்த்தர் நமக்கு சிலுவையில் பெற்றுத் தந்தார் - 4.நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5.காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். 6.மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் - கலாத்தியர் 4:4-6
நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்
இப்படி சாமுவேலின் மூலமாய் கர்த்தர் சொன்ன காரியங்கள் எல்லாம் சந்ததிக்கான ஆசிர்வாதமாகவே இருந்தது, அதனால் தான் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் தீர்க்கதரிசனமாக தாவீதிடம், நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன் என்று சொன்னார், அந்த தீர்க்கதரிசனமும் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையில் நிறைவேறியது - 14.தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 15.தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 16.அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: 17.நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். 18.அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான் - I சாமுவேல் 23:14-18
அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவத்தின் முதலாளி என்று அழைக்கப்பட்டது கூட இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக தான் இருந்தது, அது மாத்திரம் இல்லாமல், புதிய ஏற்பாட்டு புஸ்தகத்தில் பெருமபான்மையான புஸ்தகங்கள் அவரால் எழுதப்பட்டதாய் இருக்கிறது, ஏன் லூக்காவின் சுவிஷேசம் மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகங்கள் கூட பவுலின் சக ஊழியக்காரரான லூக்காவால் எழுதப்பட்டது தான், இப்படி தேவராஜ்ஜியம் கட்டப்பட கர்த்தரால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது எல்லாம் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக தான் இருக்கிறது - 1.ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். 2.அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3.கனம்பொருந்திய பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். 4.உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். 5.என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம் - அப்போஸ்தலர் 24:1-5