நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும்

புலம்பல் புத்தகத்தின் சொல்லப்பட்ட காரியங்களில் "நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை" என்று சொல்லப்பட்ட காரியம் அப்படியே இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பாடுபட்ட பொழுது நடந்தது - நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள் - புலம்பல் 1:21



தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்ட படியே இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்ட பொழுது தேற்றுவார் ஒருவர் கூட இல்லை  - 46.ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47.அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48.உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். 49.மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள் - மத்தேயு 27:46-49