மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்

செங்கடலை கடந்த இஸ்ரவேல் மக்களிடம் தேவன் ஒரு காரியத்தை சொல்லியிருந்தார், அதாவது ஜனங்கள் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொண்டு மூன்று நாள் கழித்து மலையில் எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில் தேவனை நெருங்கி சேர முடியும் (they shall come up to the mountain) என்பதாகும் - 9.அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். 10.பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, 11.மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார். 12.ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். 13.ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் (அதாவது மலையினிடத்திற்கு) வரக்கடவர்கள் என்றார் - யாத்திராகமம் 19:9-13

இது ஆங்கிலத்தில் மலையில் ஏறி, அதாவது மோசே எப்படி மலையில் ஏறி தேவனை சந்தித்தாரோ அது போலவே எல்லா மக்களுக்குமான ஒரு அழைப்பாகத்தான் இருந்தது - No hand shall touch him, but he shall be stoned or shot; whether beast or man, he shall not live. When the trumpet sounds a long blast, they shall come up to the mountain - Exodus 19:13

மக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களை பரிசுத்தப் படுத்தி கொண்டார்கள் - 14.மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள். 15.அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான் - யாத்திராகமம் 19:14-15  


மூன்றாம் நாள்  மலையின் மேல் எக்காளமும் நெடுந்தொனியாய்த் தொனித்தது, ஆனால் இஸ்ரவேல் மக்களோ மலையினிடத்திற்கு வர (அதாவது தேவனை கிட்டி சேர) அனுமதிக்கப்படவில்லை - 16.மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். 17.அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். 18.கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. 19.எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். 20.கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். 21.அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி - யாத்திராகமம் 19:16-21


அன்று எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில் ஒருவர் கூட மலையினிடத்திற்கு சேர முடியவில்லை, காரணம் மக்கள் தங்கள் சுய பலத்தால் உண்டாக்கி கொண்ட பரிசுத்தம் தேவனிடம் சேர்ப்பதற்கு போதுமானதாக இல்லை. ஆனால் தேவன் சொன்ன எக்காள சத்தமாகிய, கிடாரியின் கொம்பில் செய்யப்படும் ஷோ-வார் (Shofar) என்று சொல்லப்படுகிற எக்காளத்தின் சத்தங்கள் சில சமயங்களில் மரணஓலம் போலத்தான் இருக்கிறது. அந்த சத்தம் ஒரு நாள் கல்வாரி மலையில் தொனித்தது, அது தடையாக இருந்த தேவாலயத்தின் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்துப்போட்டது, அது தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்ததை நமக்கு தர போதுமானதாக இருக்கிறது, அது நாம் நெருங்கமுடியாத தேவனிடம் நம்மை சேர்ப்பதாவே இருந்தது,  அது தேவனின் சத்தமாகவே இருந்தது, அது நம் இரட்சகராம் இயேசு கிறிஸ்து நமக்காக ஜீவனை விட்ட சத்தம் - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது - மாற்கு 15:37-38


அது ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக, பிதாவாகிய தேவன் குமரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இட்ட கட்டளையாகவே இருந்தது - சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி - ஏசாயா 58:1


இப்படி மகா சத்தமாய்க் தன் ஜீவனை விட்டு நம்மை மீட்க வேறெந்த தெய்வத்தாலும் முடியாது என்பதை தான் சங்கீதகாரன் தீர்க்கதரிசனமாக விக்கிரகங்கள் தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது என்று சொல்லியிருக்கிறார் - 3.நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். 4.அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 5.அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 6.அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 7.அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது - சங்கீதம் 115:3-7