பவுலை விமரிசிப்பவர்களுக்கு
தேவனால் பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் கடிதங்கள் வேதாகமத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும், தேவ ஆலோசனையாகவும் இருக்கிறது, ஆனால் சில கள்ளர்கள் பவுலின் புஸ்தகங்கள் வேதாகமத்திலிருந்து இருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு "Bible Contains Fake Letters from Paul", "Paul is a False Apostle", "The False Teachings of The Apostle Paul", etc. சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதே சமயத்தில் சிலர் பவுலின் புஸ்தகங்கள் நீக்கப்பட்ட மார்மன் (The Book of Mormon by Church of Jesus Christ of Latter-day Saints and Smith) கொள்கையை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை இதை நீங்கள் அறியாமல் செய்வீர்களானால், இந்த தொகுப்பு உங்களை திருத்திக் கொள்ள உதவும்.
ஆதாரங்களின் படி, அப்போஸ்தலர்கள் லேவியர்களுக்கு ஒப்பான ஊழியத்தை தான் செய்தார்கள், அவர்களை நியமித்ததற்க்கான காரணத்தை வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கலாம் - 52.இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள். 53.இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். 54.கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள் - எண்ணாகமம் 1:52-54
அதிலும் குறிப்பாக அப்போஸ்தலனாகிய பவுலை குறித்தும், கிறிஸ்தவ ஜீவியத்திற்கு பவுலின் கடிதங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை குறித்தும் சாமுவேல் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார் - 19.சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். 20.மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான் - I சாமுவேல் 9:19-20
இப்படி அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியம், ஒரு முன்குறிக்கப்பட்ட ஆசாரிய ஊழியமாக இருந்ததினால் தான், சவுலின் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்ள மருத்துவர்களை வேதாகமம் "பேலியாளின் மக்கள்" என்றே அழைக்கிறது - 25.சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். 26.சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள். 27.ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான் - I சாமுவேல் 10:25-27