சகரியாவின் விளக்கம்

இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்  


நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் - யோவான் 14:9), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாக(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7

குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7


சகரியாவின் விளக்கம்

சகரியா தீர்க்கதரிசி கண்ட தரிசனம், நம் பரலோகத்தின் தேவன் திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாக இருக்கிறார் என்பதையும், அவரின் ஒரே பேறானவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே நமக்கு நித்திய ஜீவன் என்பதையும் அறிவிக்கிறது, முதலாவது இந்த தரிசினத்தில் சொல்லப்பட்டுள்ள குதிரைகள், ஆவியாயிருக்கிற தேவனை குறிக்கிறது என்பதை பின் வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன - எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள் - ஏசாயா 31:3 & அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் - சகரியா 12:4



இப்படியாக சகரியா கண்ட தரிசினத்தில், நான்கு விதமான குதிரைகள் இருந்தன, அவைகளில் முதலாவது குதிரைக்கு சிவப்பு என்கிற பன்பு இருந்தது, அந்த முதலாவது குதிரையும் அதின் மேலிருந்த புருஷனும், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து குறிக்கிறது, அவருக்கு பின்னாலே இருந்த மூன்று விதமான குதிரைகள், அதாவது சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் நம் பரலோகத்தின் தேவனையும், அவரின் திருத்துவதையும் குறிப்பதாய் இருக்கிறது - இதோ, இன்று ராத்திரி சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன - சகரியா 1:8



அதனால் தான் சகரியாவினால், சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த புருஷனிடம் மாத்திரமே பேச முடிந்தது, மேலும் அவரை ஆண்டவரே என்றும், அதன் பின்பு தூதன் என்றும், மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற புருஷன் என்றும், கர்த்தருடைய தூதன் என்றும் குறிப்பிடுகிறார் - 9.அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.10.அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார். 11.பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாய் இருக்கிறது என்றார்கள் - சகரியா 1:10-11


இப்படி சகரியாவினால் அழைக்கப்பட்ட ஆண்டவர் தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவேயன்றி யாருமில்லை - நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான் - யோவான் 13:13



இப்படி சகரியா தீர்க்கதரிசியுடன் பேசின இயேசு கிறிஸ்து, தனக்கு பின்னாலே நின்ற சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகளை சேனைகளின் கர்த்தாவே என்று அழைத்ததிலிருந்து,  அது நாம் காணக்கூடாதவரும், திரியேக தேவனுமாகிய பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 12.அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல, 13.அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார். 14.அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன் - சகரியா 1:12-14


இந்த திரியேக தேவனிடம், பேசக்கூடியவர் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவேயன்றி யாருமில்லை, அதனால் தான் சகரியாவினால் பிதாவிடம்(அவர்களிடம்) நேரடியாக பேச முடியவில்லை, பிதாவின்(அவர்களின்) ரூபத்தை காணவும் முடியவில்லை, அவரை சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான மூன்று விதமான குதிரைகள் என்று குறிப்பிட்டுள்ளார் - என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை - யோவான் 5:37


இந்த தரிசனங்கள் எல்லாம், நாம் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துக் கொள்வதற்கே அன்றி, தேவனுக்கு ஒரு உருவத்தை கொடுப்பதற்கு அல்ல என்றும் வேதாகமம் உறுதிப்படுத்தியுள்ளது - மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் - யாத்திராகமம் 20:4


நம் இரட்சிப்பே தேவனின் நோக்கம்


திரித்துவத்தை விளக்கும் இந்த தரிசனத்தில், நம் இரட்சிப்பே பிதா மற்றும் குமாரனின் நோக்கமாக இருப்பதையும், எருசலேமில் இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் இரட்சிப்பாகிய தேவாலயம் கட்டப்படும் என்பதையும் பார்க்கலாம் - 15.நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன். 16.ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார். 17.இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார் - சகரியா 1:12-17



யோவேலின் விளக்கம்


இப்படியாக குதிரைகளின் சாயலை கொண்டு பிதாவின் திரித்துவத்தை விளக்கின சகரியாவை போலவே, யோவேல் தீர்க்கதரிசி, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தையும் விளக்கியுள்ளார், எப்படியெனில் கர்த்தருடைய நாளை குறித்துச் சொல்லும் பொழுது, குதிரைகளின் இரைச்சல், ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும் இருப்பதாக சொல்லியுள்ளார் - 1.சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 2.அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. 3.அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. 4.அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். 5.அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும் - யோவேல் 2:1-5 



ஆபகூக்கின் விளக்கம்


அது போலவே, ஆபகூக் தீர்க்கதரிசி தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறராய் இருக்கிறார் என்று சொல்லியுள்ளார் - 8.கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? 9.கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; சேலா. நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர். 10.பர்வதங்கள் உம்மைக்கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று, ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது. 11.சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. 12.நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர். 13.உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா - ஆபகூக் 3:8-13