விலகுங்கள் தீட்டுப்பட்டவர்களே

யாருடைய வஸ்திரங்கள் தொடக்கூடாத அளவுக்கு  இரத்தத்தால் கறைப்பட்டிருந்தது? யார் தீட்டுப்பட்டவர்கள் என கருதப்பட்டார்கள்? இந்த தீர்க்கதரிசனங்கள் யாரை குறித்துச் சொல்லப்பட்டது? - 14.குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். 15.விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது - புலம்பல் 4:14-15


என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள் - சங்கீதம் 31:11

 

இந்த அவலங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்து நமக்காக தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த பொழுது தான் நடந்தது, இப்படி இயேசு கிறிஸ்து பட்ட பாடுகளை குறித்து புலம்பலின் புஸ்தகம் தீர்க்கதரிசனமாக சொல்லுகிறது - 28.அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். 29.ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான். 30.அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள் - யோவான் 18:28-30