அவரிடத்தில் அநீதியில்லை
சங்கீதகாரனாகிய தாவீது, கர்த்தரைக் குறித்து சொல்லும் பொழுது அவரிடத்தில் அநீதியில்லை என்ற ரகசியத்தை எழுதி வைத்துள்ளார், ஏன் எழுதிவைத்தார் என்றால்? இந்த பூமியில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், உண்மையான தெய்வத்தை அநீதியில்லாத தெய்வம் என்ற அடையாளத்தை கொண்டு கண்டு பிடிக்க முடியும். எப்படி என்றால் ஒரு தேசத்திற்கு ஒரே ஒரு ஜனாதிபதி தான் இருக்க முடியும், அதே போல் ஒரு கல்லூரிக்கு ஒரே ஒரு முதல்வர் தான் இருக்க முடியும், அதே போல சர்லோவகத்திலும் ஒரே ஒருவர் தான் அநீதியில்லாதவர் என்று தீர்க்கதரிசனமாக எழுதி வைத்துள்ளார் - 14.கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், 15.விளங்கப்பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் - சங்கீதம் 92:14-15
இதை தான் இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தில் உறுதிப்படுத்தினத்தை பார்க்கிறோம் - 11.பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள். 12.ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். 13.ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை. 14.பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15.அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.16.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17.அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18.சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை - யோவான் 7:11-18