ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பல தலைப்புகளில் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்,  வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தின் படி, சீஷர்கள் இன்னும் பக்குவப்படாதவர்களாகத் தான் இருந்தார்கள்.


📌 அப்போஸ்தலர் என்கிற பெருமையுள்ளவர்களாக

📌 தங்களை தாங்களே மகிமைபடுத்துகிறவர்களாக 

📌 மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களாக 

📌 தங்களுக்குளேயே சண்டையிடுகிறவர்களாக 

📌 மற்றவர்களின் ஊழியங்களை தடுப்பவர்களாக

📌 சிறியோர் பெரியோர் என்று தராதரம் பார்க்கிறவர்களாக 

📌 மாமிசத்திற்கு இடம் கொடுப்பவர்களாக 

📌 ஜெபம் செய்யத்தவர்களாக 

📌 சுயபலத்தை நம்பினவர்களாய் 

📌 விசுவாசம் இல்லாதவர்களாய்

ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பிணியாளிகளைக் குணமாக்கி திரும்பி வந்த சீஷர்களோ, ஊழியத்தை குறித்துச் சொல்லும் பொழுது, தாங்கள் செய்த காரியங்கள் என்று சொல்லி தங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசினார்களாம், அப்பொழுது கர்த்தர் அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, மாறாக அவர்களை வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றார் - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10

ஆரம்பத்தில் ஊழியத்தை முடித்து தங்களை குறித்து பெருமை பாராட்டிக்கொண்டிருந்த சீஷர்கள், இப்பொழுதோ கர்த்தர் தான் எல்லா அற்புதங்களும் காரணம் என்று, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்று அறிக்கை செய்தார்கள், அப்படி துதி கனம் மகிமையெல்லாம் இயேசுவுக்கு உரித்தாக்கும் பொழுது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் தான் "ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" என்பதாகும்   - 17.பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18.அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19.இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும்  மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20.ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21.அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 22.சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23.பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24.அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 10:17-24


இப்படி ஊழியக்காரர்களாகிய நமது பாதுகாப்பு நம் கர்த்தரிடத்தில் தான் இருக்கிறது, அந்த வாக்குத்தத்தம் துதி கனம் மகிமையெல்லாம் இயேசுவுக்கு உரித்தாக்கும் பொழுது நமக்கு கிடைக்கிறது.