சவுல் எப்படி பவுலாக மாறினார்
அப்போஸ்தலர் 13வது அதிகாரத்தை பார்க்கும் பொழுது, சபையிலே சவுல் ஒரு கடைநிலை ஊழியக்காரராக தான் இருந்தார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும், அதனால் தான் சவுலின் பெயர் ஊழியக்காரர்களின் பட்டியலில் கடைசியாக இருந்தது - 1.அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். 2.அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். 3.அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள் - அப்போஸ்தலர் 13:1-3
ஆனால் பழைய ஏற்பாட்டின் சவுலை அபிஷேகிக்கும் பொழுது, சாமுவேல் நடக்க வேண்டிய சம்பவத்தை குறித்துச் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார் - 5.பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 6.அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய் - I சாமுவேல் 10:5-6
சொல்லப்பட்ட படியே, புதிய ஏற்பாட்டின் சவுல் பிசாசுகள் நிறைந்த மாயவித்தைக்காரனை எதிர் கொள்ளும் பொழுது, பரிசுத்தஆவியின் வல்லமையை பெற்று பவுலாக மாறினார், இந்த சம்பவத்திற்கு பின்பே அவர் பவுல் என்றே அழைக்கப்பட்டார் - 6.அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். 7.அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். 8.மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். 9.அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: 10.எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? 11.இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். 12.அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான் - அப்போஸ்தலர் 13:6-12
ஆரம்பத்தில் ஊழியக்காரர்களின் பட்டியலில் கடைசி நபராக இருந்த சவுலை, தேவன் தான் முன் குறித்தபடியே கர்த்தருடைய ஆவியினால் நிரப்பினத்தினால், அவர் பவுலாக மாறி, பாப்போ பட்டணத்தைவிட்டு செல்லும் பொழுது "பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும்" என்று சொல்லம் படியான தலைவராக மாற்றினார் - 13.பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான் - அப்போஸ்தலர் 13:8-13