ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள்

துதி, கனம், மகிமை எல்லாம் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவுக்கே உரியது என்பதை தான் வேதாகமம் இந்த வசனங்கள் மூலமாக நமக்கு போதிக்கிறது - கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர் - I நாளாகமம் 29:11


ஒரு ஊழியகாரனின் அழைப்பே துதி, கனம், மகிமை, சாட்சிகள் எல்லாவற்றையும் முதற்பேறான இயேசு கிறிஸ்துவுக்கு உரித்தாக்குவது தான், ஒரு ஊழியகாரனின் அழைப்பும் நோக்கமும் இப்படியாக இருக்கும் பொழுது, மற்றவர்கள் நம்மை புகழ்வது போல் நடந்துக்கொள்வது நிச்சியமாகவே ஒரு நம்பிக்கைத் துரோகம காரியம் தான் -  29.தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30.எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் - ரோமர் 8:29-30


இப்படி மற்றவர்கள் நம்மை புகழ்வது போல் நடந்துக்கொள்வது மாத்திரம் இல்லாமல், அதனை ஏற்றுக்கொள்ளுகிறவர்களை பார்த்து கேட்கப்பட்ட கேள்வி தான் இது - தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? - யோவான் 5:44 


அதனால் புகழை திருடுகிற இது போன்ற நம்பிக்கை துரோக காரியங்களை உதறித் தள்ளிவிட்டு, இயேசு கிறிஸ்துவுக்கே துதி, கனம், மகிமையை உரித்தாக்கும் பொழுது, விசுவாசத்தைத் துவக்குகிறவர் நம்மோடிருப்பது நிச்சியம் - ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் -  எபிரெயர் 12:1