நாலாம் தலைமுறையின் விளக்கம்
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியின்) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா - யோவான் 14:10), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாகவும்(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
ஆனால் குமாரனை குறித்து சொல்லும் பொழுதுதோ, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய மூன்று பேருமே, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஜலம், இரத்தம், ஆவியாக இருந்தார்கள் என்றும், இது குமாரனைக்குறித்துக் பிதாவாகிய தேவனே கொடுத்த சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார் - 8.பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே - I யோவான் 5:8-9, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7
நாலாம் தலைமுறையின் விளக்கம்
ஆத்ம இரட்சிப்பைக் குறித்து கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தில் "நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்"என்று சொன்னது எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் மீட்கப்பட்டதை குறித்த தீர்க்கதரிசனமா? - 12.சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. 13.அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். 14.இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். 15.நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். 16.நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார் - ஆதியாகமம் 15:12-16
And in Mount Sinai, God confirm that he will come in the flesh - 16.உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். 17.அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள். 18.கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான். 19.மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே. 20.அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான் - யாத்திராகமம் 6:16-20
Finally the offering was made at Mount Calvary, when Jesus Christ was crucified for our Sins - It is a continual burnt offering, which was ordained in mount Sinai for a sweet savour, a sacrifice made by fire unto the Lord - Numbers 28:6
மக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களை பரிசுத்தப் படுத்தி கொண்டார்கள் - 14.மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள். 15.அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான் - யாத்திராகமம் 19:14-15
இதிலிருந்து "நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்" என்று சொன்னது இயேசு கிறிஸ்துவினால் நமக்கு உண்டாகும் நித்திய மீட்பாகிய ஆத்ம இரட்சிப்பைக் குறித்ததாகவே இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்
எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை
கர்த்தர் ஆபிரகாமுக்கு நாலாம் தலைமுறையாகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பை குறித்து சொன்ன இடத்தில்தானே "எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை" என்றும் சொல்லியிருந்தார், யார் இந்த எமோரியன்? - 12.சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. 13.அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். 14.இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். 15.நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். 16.நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார் - ஆதியாகமம் 15:12-16
யார் இந்த எமோரியன் என்பதற்கான விளக்கம் எசேக்கியேலின் gகொடுக்கப்பட்டுள்ளது, எப்படியெனில் அக்கிரமம் மிகுதியான வேளையிலே இஸ்ரவேல் மக்களும் எமோரியர் என்றே அழைக்கப்பட்டார்கள், இதிலிருந்து எமோரியர் என்பது ஒரு குறிப்பிட்ட ஜனத்தை ஜனத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிற சந்ததியின் அடையாளமாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் - 1.கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2.மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: 3.கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி - எசேக்கியேல் 16:1-3