தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்
தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்
இயேசு கிறிஸ்துவிடம் ஒருவன் "ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன்" என்று சொன்னான், அது வரை யாருமே கர்த்தரிடம் அப்படிச் சொன்னதும் இல்லை, ஆனால் கர்த்தர் தன்னை பின்பற்றி வர அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை, அது அவனுக்கு எவ்வளவு துக்கத்தைக் கொடுத்திருக்கும் - 57.அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். 58.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் - லூக்கா 9:57-58
ஆனால், என்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன தேவன், ஏன் தன்னை பின்பற்ற விரும்பினவனிடம் "மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என்று சொல்லி தன்னை பின்பற்ற மறுத்து விட்டார்? ஏன் இந்த சம்பவத்தை பரிசுத்த ஆவியானவர் வேதாகத்தில் சொல்லியிருந்தார்? பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை - யோவான் 6:37
முதலாவது அக்கால மக்களின் கலாச்சாரத்தை அறிந்துக் கொள்ள வேண்டும், அதிலும் இஸ்ரவேல் மக்களின் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் என்னவென்றால் தங்கள் வீட்டிற்கு வருவோரின் கால்களை கழுவி சுத்தம் செய்து, அதன் பின்பு தலை வணங்கி வரவேற்பார்களாம், அரியணையில் அமர்ந்த சாலொமோன் ராஜாவும் தன் தாயாரை தலை வணங்கி வரவேற்றதை வேதாகமத்தில் பார்க்கலாம் - பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டுவந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான் - I இராஜாக்கள் 2:19
இப்படி தன்னிடம் வருவோரை தலை வணங்கி வரவேற்கும் கலாச்சார காலகட்டத்தில் தான், கர்த்தர் "நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு" என்று சொன்னார், அதாவது நரிகளுக்கு இந்த பூமியில் வீடுகள் உண்டு, அவைகளால் தன் விருந்தினரை வரவேற்க முடியும், அதேபோல பறவைகளுக்கும் கூடுகள் உண்டு, அவைகளாலும் தன் விருந்தினரை தன்னுடன் சேர்த்து கொள்ள முடியும், ஆனால் கர்த்தருடைய நித்திய வீடோ இந்த பூமிக்குரியதல்ல, அதனால் தான் மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்று சொன்னார், அதாவது நான் இப்பொழுது உன்னை தலை சாய்த்து வரவேற்க முடியாது என்றார்
இப்பொழுது நாம் அறிந்து கொள்ள முடியும் ஏன் கர்த்தர் மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்று சொன்னார் என்று, முதலாவது கர்த்தருடைய ராஜ்யம் இந்த பூமிக்குரியதல்ல என்பதையும், அது மாத்திரம் இல்லாமல் அவருடைய ராஜ்யத்திற்க்கு வர நாம் எல்லோரும் அவருடைய இரத்தத்தால் கழுவப் பட்டிருக்க வேண்டும் என்கிற மேலான காரணத்தினால் தான் கர்த்தர் மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்று சொன்னார், இதை கிரேக்க பாஷையில் க்ளீனி என்று சொல்லுகிறார்கள்.
அதனால் தான் இயேசு கிறிஸ்து கடைசியாக சிலுவையில் தன் தலையை சாய்த்து நம் எல்லோரையும் தன்னுடைய ராஜ்ஜிற்க்கு வரவேற்று விட்டு, பின்பு தன் ஆவியை விட்டார், இது கிரேக்க பாஷையில் க்ளீனஸ் என்று எழுதப்பட்டிருக்கிறது - 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:28-30
உயிர் போகும் தருவாயில் மனிதனுடைய சரிரத்தில் சில உணர்வுகள் ஏற்படுவது உண்டு, அதனால் தான் வேதாகமம் மிக தெளிவாக சொல்லுகிறது, இயேசு கிறிஸ்து தன் ஆவியை விடும் முன்பே தன் தலையை சாய்த்து நம் எல்லோரையும் தன்னுடைய ராஜ்யத்திற்க்கு வரவேற்றார் என்று.
தலை சாய்த்து வரவேற்பது என்பது, எதோ ஒரு நாட்டிற்கோ, அல்லது பாஷை காரார்களுக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினர்க்கோ உரிய வழக்கம் கிடையாது, தலை சாய்த்து வரவேற்பது என்பது முழு உலகத்திற்கும் உள்ள ஒரு பொதுவான பாஷை, இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் புரிந்த ஒரு காரியம், அதனால் யாருமே இயேசு கிறிஸ்து என்னை அழைக்கவில்லை என்று சொல்ல முடியாது.
ஏன் இன்னும் தயக்கம்? வாருங்கள் இயேசு கிறிஸ்துவிடம், அவரே நம்மை கழுவி சுத்தம் செய்து தன்னுடைய பரலோக ராஜ்யத்திற்க்கு அழைத்து செல்வார்.
ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறித்துச் சொல்லும் பொழுது, கடைசியாக கர்த்தர் தன் தலையைச் சாய்த்தார் என்கிற ஒரு காரியம் சொல்லப்பட்டுள்ளது - 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:28-30
இதிலிருந்து இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியர் மற்றும் ரோம அதிகாரிகளின் முன்பு நின்ற பொழுது தலை குனிந்தவராக நிற்கவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 6.அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7.கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன் - ஏசாயா 50:6-7
தன் சிரசில் கோலால் அடித்த பொழுதும், உழுத நிலத்தை போல தன் சரிரத்தை அடித்த கிழித்த பொழுதும் பயம் நிறைந்தவராகவோ அல்லது தலை குனிந்தவராகவோ நிற்க்க வில்லை.
சிலுவையில் தன் இரத்தம் எல்லாம் வடிந்த நிலையிலும், முற்கிரீடம் வேதனையை தந்த பொழுதும், பயம் நிறைந்தவராகவோ அல்லது தலை குனிந்தவராகவோ நிற்க்க வில்லை.
கடைசியாக இயேசு கிறிஸ்து தன் ஆவியை விடும் முன்பு, தன் தலையை சாய்த்து நம் எல்லோரையும் தன்னுடைய ராஜ்ஜியத்திற்கு வரவேற்றார். தலை சாய்த்து வரவேற்பது என்பது, எதோ ஒரு நாட்டிற்கோ, அல்லது பாஷை காரார்களுக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினர்க்கோ உரிய வழக்கம் கிடையாது, தலை சாய்த்து வரவேற்பது என்பது முழு உலகத்திற்கும் உள்ள ஒரு பொதுவான பாஷை, அதனால் யாருமே இயேசு கிறிஸ்து என்னை அழைக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏன் இன்னும் தயக்கம்? வாருங்கள் இயேசு கிறிஸ்துவிடம், அவரே நம்மை கழுவி சுத்தம் செய்து தன்னுடைய பரலோக ராஜ்ஜியத்திற்கு அழைத்து செல்வார்.