ஆரோனும் சவுலும் பெற்ற அபிஷேகத்தின் ஒற்றுமை
மோசேயின் ஆசிர்வாதம்: மோசே இஸ்ரவேலரை ஆசிர்வதிக்கையில் லேவியைக்குறித்துச் சொல்லி, உடனே பென்யமீனைக்குறித்துச் சொன்னார்
8.லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. 9.தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். 10.அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் போதித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் இடுவார்கள். 11.கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான். 12.பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.
ஜனத்தொகையில் சேர்க்கப்படவில்லை: ஆரோனை அபிஷேகம் செய்த பிறகு லேவியர் ஜனத்தொகையில் சேர்க்கப்படவில்லை, சவுலை அபிஷேகம் செய்த பிறகு பென்யமீன் கோத்திரமும் ஜனத்தொகையில் சேர்க்கப்படவில்லை
45.இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும், 46.ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். 47.லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை - எண்ணாகமம் 1:45-47
4.யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து, 5.ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள். 6.ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான் - I நாளாகமம் 21:4-6
ஆரோனும் சவுலும் பெற்ற அபிஷேகம்: ஆரோன் மற்றும் சவுல் இரண்டு பேருமே தைலத்தால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார்கள்
அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான் - லேவியராகமம் 8:12
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? - I சாமுவேல் 10:1
பலியின் முன்னந்தொடை: ஆசாரிய ஊழியத்தின் அடையாளமான பலியின் முன்னந்தொடை ஆரோன் மற்றும் சவுல் இரண்டு பேருக்குமே கொடுக்கப்பட்டது
32.உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. 33.ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும் - லேவியராகமம் 7:32-33
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டுவந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான் - I சாமுவேல் 9:24
ஊழியத்தின் வித்தியாசம்
ஆரோனுக்கு அளிக்கப்பட்ட அபிஷேகம், பலி செலுத்துவதற்க்கான அபிஷேகமாக இருந்தது, அதாவது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்பதற்கான அபிஷேகமாய் இருந்தது, அதனால் தான் ஆரோன் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு பலியின் முன்னந்தொடை கொடுக்கப்பட்டது, இப்படி பலி செலுத்துவதற்க்காக அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் சந்ததியில் வந்த பிரதான ஆசாரியர் தான் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு ஒப்புகொடுத்தார்
ஆனால் சவுலுக்கோ இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடு காத்திருக்க வேண்டும் என்றும், அதன் பின்பு தான் ஊழியம் என்பதினால் முதலாவது பலியின் முன்னந்தொடை கொடுக்கப்பட்டு பின்பு அபிஷேகம் செய்யப்பட்டார், அதனை உணர்த்த தான் சவுல் ராஜா பலிகள் செலுத்த அனுமதிக்கப்பட வில்லை.
அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி - லேவியராகமம் 3:5
நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான் - I சாமுவேல் 10:8
நாற்பது வருட ஊழிய நிறைவு: ஆரோன் மற்றும் சவுல் இரண்டு பேருக்குமே நாற்பது வருட ஊழியம் அளிக்கப்பட்டிருந்தது, இதில் ஆரோனின் ஊழியம் பலி செலுத்துவதை முதன்மையானதாகவும், சவுலின் ஊழியம் தலைவருக்கு ஒப்பான ஊழியமாகவும் இருந்தது
37.காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள். 38.அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான். 39.ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான் - எண்ணாகமம் 33:37-39
20.பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார். 21.அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார் - அப்போஸ்தலர் 13:20-21
தங்களுடைய மரணம் முன்னறிவிக்கப்பட்டது: ஆரோன் மற்றும் சவுல் இரண்டு பேருக்குமே அவர்களின் மரணம் முன்னறிவிக்கப்பட்டது
23.ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 24.ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. 25.நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி, 26.ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார் - எண்ணாகமம் 20:23-26
16.அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? 17.கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். 18.நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார். 19.கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான் - I சாமுவேல் 28:16-19